8. அமைதி
மெய்யறிவின் மணிமகுடத்தில் உள்ள தலைசிறந்த மணி மனஅமைதியே. மணியின் செறிவுப்பண்பு இயற்கையின் கருவில் அது கீழே இருந்து முதிர்ந்ததன் பயன். அப்பண்பு போதாமல் மனிதனும் தன் முயற்சியை அதில் ஈடுபடுத்தி அதனைப் பட்டையிட்டு ஒளிப்பண்பு பெருக்கியிருக்கிறான். மணியைப் போலவே மனஅமைதியும் நீடித்த பயிற்சியின் சின்னமாகவே அமைந்துள்ளது. நாட்பட்ட செயலறிவு, கருத்துக்களின் செயலமைதி பற்றிய தீர்க்க அறிவு ஆகியவற்றின் நிறைவிளை வாகவே மனஅமைதி உருவாகியுள்ளது.
ஒருவன் தன்னைத்தான் உணர்ந்தபின், அவன் கருத்தின் உருவாகவே அவன் தற்பண்பு அமைகிறது. இதைக் கண்டபின்தான் மனிதன் மனஅமைதி உடையவன் ஆகிறான். ஏனெனில் தன்னையும் தன்இயல்பையும் கொண்டுதான் அவன் பிறரையும் அவர்கள் இயல்புகளையும் உணர்ந்து செயலாற்ற முடியும். தன் செயல்களைப் போலவே, பிறர் செயல்களும் அவர்கள் கருத்துக்களையும் பண்புகளையும் சார்ந்தவை என்று அறியுந்தோறும் அவன் யார் மீதும் எதற்காகவும் எரிந்து விழவோ, புகைந்தழலவோ மாட்டான். தன்னடக்கமும் பொறுமையும்காட்டி அவர்களிடமும் அவன் அதே பண்புகளை உண்டுபண்ணுவான். அமைதி காட்டாமல் சீற்றங்காட்டி யிருந்தால் அவர்களிடமும் சீற்றமே வளர்ந்திருக்கும். ஆனால் சீற்றம் சீற்றத்தை வளர்ப்பதுபோல் அமைதி. பொறுமை, தன்னடக்கம் ஆகிய பண்புகள் அதே பண்புகளை வளர்க்கும்.
அமைதியான மனிதன் தன்னை அடக்கக் கற்றுக் கொண்டது போலவே, பிறருக்கிசைய நடக்கவும். அதன் மூலம் பிறரை இயக்கவும் வல்லவனாகிறான். இது பிறரிடம் அவன்