உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 4.pdf/56

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஒரு

மனிதவசியம் அல்லது மனக்கவர்ச்சி

23

வழிப்பட்டு உறைத்து நிற்பதனைப் பழக்கத்திற் பார்த்திருக்கின்றனம் அல்லமோ? நாடக அரங்கில் ஆடும் நாடகமாந்தர் தாந் தாம் பூண்ட கோலங்களுக்கு ஏற்பச் சிறிதும் வழுவாமல் தம்மை அக்கோலங்களாகவே முழுதுங்கருதி ஆடஆட, அவர் செய்கைகள் இயற்கையழகு வாய்ந்தனவாய் மிக்க மகிழ்ச்சியினைத் தரும். அழகிய ஒரு பெண்ணுருவைப் பூண்டவன் தன்னை அப்பெண்ணாகவே முற்றும் நினைந்து, அவளுக்குரிய குணங்குறி செய்கைகளை இயற்கைப்படுத்திக் காட்டவல்லனாயின், அவனுடைய திறத்தைக்கண்டு உவப்படை யாதார் உலகில் யாருமே இரார் என்பதனை உறுதியாகச் சொல்வேம். வனப்பின் மிக்க ஓர் இளவரசன் கோலம் பூண்டு வந்தவன். அவ்வரசனுக்குரிய ஆண்டன்மை அழகின் றிறங்களைத் திரிபின்றித் தெரித்துக் காட்டுவனாயின், அவனைக் கூத்தன் என நினையா யாமல் இளவரசனென்றே எல்லாரும் நினைந்து அளவில்லாக் களிப்படைவர்கள். ஒருவர்க்குரிய கோலத்தைப் பூண்டவன் தன்னை அக்கோலமுடையாரின் வேறாகச் சிறிதும் நினையாமல், அவராகவே தன்னைக் கருதும் அத்தனை மன வொருமை காட்டுவனாயின், அவனைக் காண்பாரும் அவன் மனவொருமையின் வயப்பட்டு அவனை ஆட்டக்காரனாகக் கருதாமல், அக்கோலத்திற்கு முற்றும் உரியனாகவே பெரிதும் நினைந்து அகம் மகிழா நிற்பர். இங்ஙனம் ஒருமையில் முதிர்ச்சி பெற்ற நாடகக்காரரை வியத்தகும் ஆற்றல் வாய்ந்தவர்களென அறிவான் மிக்கோர் கொண்டாடுவர். அஃதொன்றோ, அவ்வக் கோலங்களுக்கு ஏற்ப அவர்கள் பாடும் இன்னிசைப் பாட்டுகளைக் கேட்குந்தோறும் வன்னெஞ்சக் கள்வருந் தம்மனம் நெக்குவிட்டுருக இன்புருவாய் நிலவுவர். இங்ஙனம் ஓவியக் காரனாலும், இன்னிசை வல்லானாலுந் தரலாகாப் பெரு மகிழ்ச்சியினை நாடகக்காரர் விளைக்கலாயினது எத னால் என்பீரேல், மனவொருமையின் மாட்சியினாலென்று அறிமின்கள்!

னிக்கற்றாரும் மற்றாருங் கூடிய பேரவையிலே நின்று தேன்மாரி பொழிந்ததெனப் பேசும் பெறற்கருந் திறமைவாய்ந்த கற்றார் தமது மனவொருமைப் பாட்டினால் விளைக்கும் வியப்பினை என்னென்பேம்! அவர்க்குள்ள அவருடைய மனவொருமை அவர்தங் கண்களிலே மின்னென வீசுதலைப்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_4.pdf/56&oldid=1576008" இலிருந்து மீள்விக்கப்பட்டது