உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 4.pdf/57

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

24

மறைமலையம் - 4

பார்த்தவுடனே, அவையிலுள்ளார் அனைவரும் அடக்க ஒடுக்கமுடையராய்க் கற்பாவைபோல் அசைவற்றிருக் கின்றனர்! பிறகு அவர் தமது வாய்திறந்து சொல்லழகு பொருளழகு நிரம்பக் கடல்மடை திறந்ததெனப் பேசுகையில் அவையினர் அத்தனை பெயரும் அடங்காப் பெருமகிழ்ச்சியுந் துயரமும் பொங்க அறிவு துலங்கப் பெறுகின்றனர்! பேசும் புலவர் தாம் பேசுகையில் மகிழ்ச்சிக்குக் காரணமானவற்றை எடுத்துச் சொல்ல எல்லாரும் மகிழ்கின்றனர்! அவர் துயரத்திற்குக் காரணமானவற்றை எடுத்துச் சொல்ல எல்லாருந் தேம்பித் தேம்பிக் கண்ணீர் சிந்திக் கலுழ்கின்றனர்! சொல்வன்மை யுடையார் அவையிலுள்ளாரை யெல்லாம் பாவைபோல் தாம் விரும்புமாறெல்லாம் ஆட்டி வைக்கின்றனர்! தமது கருத்துக்கு இணங்காதவரையும் அதற்கு இணங்கும்படி செய்விக்கின்றனர்! தீய செயல்களில் மிகப் பழகி நெஞ்சங் கருங்கல்லாகப் பெற்றவர்களையும், நெஞ்சம் இளகச் செய்து தாஞ்செய்யுந் தீய செயல்களைக் கண்டு தாமே வெறுப்படையும்படி திரித்து விடுகின்றனர்! நல்லொழுக்க முள்ளவர்கள் தமது நல் லொழுக்கத்தின் மேன்மையை அவர் சிறப்பித்துப் பேசக் கேட்கும் ஒவ்வொரு நொடியும் பேரின்பத் தால் உளந்துளும்பி மேன்மேல் மனக்கிளர்ச்சி மிகப் பெற்றுத் தூயராகின்றனர்! கல்வி கற்கும் பெரும்பேறு வாய்க்கப் பெறாதவர்கள், அக் கலைவல்லார் பலநூற் பொருள்களின் பிழிவாய்த் திரட்டித்தரும் நுண்பொருள் அமிழ்தத்தைக் காதாரப்பருகி அறியாமை நீங்கி அறிவு மிக விளங்கப் பெறுகின்றனர்! இன்னும் அவர் சொற்களைக் கேட்டு உலகத்தின் இயற்கையும் உயிரின் இயற்கையுங் கடவுளின் இயற்கையும் வருத்தமின்றி எளிதில் உணர்ந்து மக்கள் அடையும் பயன்களை அளவிடப் புகுந்தால் அவை நஞ்சொல்லில் வ அடங்காவே! ஆ! சொற்றிறம் உடையார் விளைக்கும் உதவிக்கு உலகம் யாது கைம்மாறு செய்ய வல்லது! இத்தனையும் அவர் எதன்றுணையாற் செய்தனர் என்று கேட்பீரேல், மனவொருமை என்னும் அறிவுக்களஞ்சியத்தால் என் என்று அறிமின்கள்! இத்தகைய மனவொருமையே மனிதவசியத்திற்குங் காரணமாம் என்று தெளிமின்கள்!

இனி மேற்சொல்லிய துறைகள் எல்லாவற்றினுஞ் சிறந்த நல்விசைப் புலவனுக்கு உள்ள மன ஒருமையின் வலிவைச் சிறிது

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_4.pdf/57&oldid=1576009" இலிருந்து மீள்விக்கப்பட்டது