உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 4.pdf/58

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மனிதவசியம் அல்லது மனக்கவர்ச்சி

தஞ்சொற்களைக்

25

நினைத்துப் பாருங்கள்! ஓவியக்காரனுக்கோ சிவப்பு நீலம் மஞ்சள் முதலான வண்ணங்கள் இருக்கின்றன. இவ்வண்ணங் களின் துணைகொண்டு தான் கண்ட பொருளின் உருவைத் தான் கண்டபடியே ஓவியத்தில் எழுதி அதனை அவ்வாறே நங் கண் எதிரே காட்டிவிடுகின்றான். நாடக அரங்கில் ஆடும் மாந்தரோ கொண்டே தாம் எண்ணிய மேம் பொருள்களைக் கேட்பார் உள்ளத்தில் இன்பம் ஊறப் பேச்சினாலுந் தம்முடைய கண் கால் கை உடம்பு முதலிய உறுப்பின் அசைவுகளினாலும் பலவகைக் கோலங்களி னாலுந் தாம் தம்மனத்திற் கருதியதைக் கருதியவாறே புறத்தே கேட்பார்க்கு இனிது விளங்கும்படி செய்ய வல்லராகின்றனர். ஆகவே, இவர்க்குச் சொற்களோடுகூட றுப்புகளின் அசைவுகளும் ஆடை அணிகலங்களாற் சிறந்த கோலங்களும் பெருந்துணையாய் இருந்து பேர் உதவி புரிகின்றன. இவ்விருவரின் வேறான நல்லிசைப் புலவனுக்கோ, வெறுஞ் சாற்களின் உதவியன்றி வேறு உதவி சிறிதுமில்லை. ஆயினும், இவ் வெறுஞ் சொற்களின் உதவிகொண்டு இவன் செய்யுஞ் செய்கையோ நமது அறிவினால் அளவிட்டுச் சொல்லப்படுந் தன்மையுடையதன்று. ‘வல்லவன் ஆட்டும் பம்பரம் மணலினும் ஆடும்' என்னும் பழமொழிக்கு இணங்கச் சொற்களை இடம் அறிந்து பொருத்தி எண்ணிய பொருள்களை எளிதிற் பிறர் அறியும்படி செய்யுளிலே இன்பம் ஊற அமைத்துவிடுகின்றான். அவன் எழுதிய செய்யுட்களைப் பயில்வோர் அச் செய்யுட்களில் அமைந்த பொருள்களைத் தங் கண்களின் எதிரே காணாவிடினும், அவை தம்மை நேரே கண்டாற்போல் அகக் கண்ணால் தெளியக்கண்டு அளவுபடாப் பேரின்பம் அடைகின்றனர்.புள்ளிமான்கள் துள்ளியோடிப் புதிது வளர்ந்த புல்லைக் கறிக்கவும், புதர்களில் மறைந்த தூநிற முயல்கள் புதர்களை விட்டுப் பொள்ளென ஓடவும், நல்லிசைப் பாடும் நாணுவம் பறவைகள் ஓங்கி வளர்ந்த மூங்கில் நெற்களைப் பொன்வாய் அலகாற் பொறுக்கித் தின்னவும், எங்கும் மரங்கள் அடர்ந்தமையால் அவற்றின் ஊடே வெய்யவன் கதிர்கள் சிற்சில தோன்றச் சில்லென்று வீசுங் காற்றின் அசைவால் அசையும் இலைகளின் ஓசையும், மரப் பொந்துகளிலிருந்து கூவுங் குயிலின் இனிய குரல் ஒலியும் வேறு பல்வகைப் புள்ளினங்கள் செய்யும்

இனிய

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_4.pdf/58&oldid=1576010" இலிருந்து மீள்விக்கப்பட்டது