உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 4.pdf/76

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மனிதவசியம் அல்லது மனக்கவர்ச்சி

43

பெரும்பாலும் இயற்கை. இன்னுந் தாம் வைத்திருக்கும் பொருள்களைப் பற்றியுந் தாம் இருக்கும் இடங்களைப் பற்றியுந், தாம் வழிநடந்து சென்ற ஊர்களைப் பற்றியும் வேறு பலவற்றைப் பற்றியும் விரித்துச் சொல்க என்றால், அங்ஙனமே சொல்லத் தெரியாமல் விழித்துத் தம் அறியாமையை வெளிப்படுத்தும் மக்கள் அந்தோ! தம்மை அறிவுடையார் என இறுமாந்து எண்ணியிருப்பது எவ்வளவு பேதமை!

இம் ம்

இங்ஙனம் ஒவ்வொரு நொடியுங் கட்பார்வையானது மாறிமாறிச் சென்று, ஒரு பொருளிலாவது அழுந்தி அதனைப் பகுத்தறிந்து செல்லாமையால் மக்களுக்கு நுண்ணறிவு விளங்காமற் போவதுடன், நினைவினாற்றலுங் குறைந்து போகின்றது. இதனால், அவர் அடைந்த பயன் பயன் யாது? அறியாமையேயாம். அறியாமை மிக்க இவர்க்கும் நிலத்திற் சிதர்ந்து கிடக்குங் கூழாங்கற்களுக்கும் வேறுபாடு என்னை? சொல்லுமின்! இவ்வறியாமையாற் பெறுவது யாது? சாக்காடுதான். எங்ஙனம் எனின், மக்கள் உயிர் வாழ்க்கைக்கு இன்றியமையா நிலைக்களனாயுள்ளது தலையின்கண் அமைந்துள்ள மூளையேயாகும். மூளையானது, மக்களினறிவு விளங்குதற்கு ஓர் அருமருந்தன்ன கருவியாகத் தரப் பட்டிருக்கின்றது. அம் மூளையில் அமைந்த நுண்ணிய நரம்புகள் பலவுங் கண் செவி முதலான ஐம்பொறிகளோடு இயைந்து நிற்பதனால், அவ்வைம்பொறிகள் அசையுந்தோறும் அவற்றில் வந்து பதிகின்ற வெளிப்பொருட்டன்மைகள் அத்தனையும் அந் நரம்புகளின் வழியே சென்று மூளையிற் பதிந்துவிடுகின்றன. ஆனால், இவ்வைம்பொறிகளும் டைவிடாது வெளிப் பொருள்கள் ஒவ்வொன்றையும் விட்டுவிட்டு அறிவதனால், மூளையிற் பதியும் அவற்றின் தன்மைகள் அழுத்தமாக நில்லாமல் மெல்லென நிற்கின்றன. அழுத்தமாகப் பதியுந் தன்மைகளால் நினைவினாற்றல் மிகுதிப்படும் மெல்லென நிற்பனவற்றால் அவ்வாற்றல் குறைவுபடும். வெளிப்பொருட்டன்மைகள் மூளையில் அழுந்திப் பதிவதனால் அம் மூளையின் அணுக்கள் இறுகி வலுப்படுகின்றன. அங்ஙனம் அவை வலுப்படவே மூளையும் வலுப்பட்டு வாழ்நாள் நீளும் இனி, வெளிப்பொருட் ன்மைகள் அங்ஙனம் அழுந்திப் பதியாவிட்டால் மூளை வலிவுகுன்றி வாழ்நாளுங் குறையும். வாழ்நாள் குறைவதொன்று

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_4.pdf/76&oldid=1576028" இலிருந்து மீள்விக்கப்பட்டது