உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 4.pdf/81

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

48

மறைமலையம் – 4

இமையாது நிற்க அதன் வழியே உள்ளமும் அசைவின்றி ஒன்றிலே நிலைபெற்று நிற்குமாயின், அப்போது அவ் வுள்ளத்தால் நினைக்கப்பட்டது நினைந்தபடியே கைகூடும்.

6

இனி, இங்ஙனம் பழகிய கண்களின் உதவிகொண்டு எந்த வுயிரையுந் தன்வழிப்படுத்தல் எளிதிலே கைகூடற் பாலதொன்றாம். கண்ணுள்ள எல்லா வுயிர்க்கும் அவற்றின் மன அறிவு கண்களின் வாயிலாகவே விளங்கி வருகின்றதென்னும் உண்மை முன்னரே எடுத்துக்காட்டப்பட்டிருப்பதனால், எந்த உயிரைத் தன்வழிப்படுத்தல் வேண்டுமாயினும் அதனை அவற்றின் கண்களின் வாயிலாகவே செய்தல் வேண்டுமென்பது எவர்க்கும் இனிது விளங்கும். ஆகவே, கண் உள்ள எந்தவுயிரையுங் கண்ணுள் உற்றுப்பார்த்துத் தான் நினைத்தபடி ஆகவேண்டு மென்று கோரினால், அஃதப்படியே ஆகும் என்பதிற்றடை யில்லை. அங்ஙனமாயின், உற்றுப்பபார்க்கப் பழகிய ஒருவர் மற்றொருவரை உற்றுப் பார்த்துத் தாம் நினைத்தபடி நடத்த முயல்வராயின், அம் மற்றவரும் அங்ஙனமே அவரை எதிருற்று நோக்கித் தாம் நினைந்தபடி நடத்த முயல்வரன்றோ? அங்ஙனம் ஒருவரை யொருவர் எதிரிட்டு நோக்கும் இருவரில் எவரது எண்ணம் ஈடேறும் என்றால் வலிமையில் மிகுதிப்பட்டு நிற்பவர் உள்ளமே அதனிற் குறைந்து நிற்பவரைத் தன்வழிப்படுத்திக் காள்ள வல்லதாகும். அங்ஙனமாயின், ஒருவரினும் வேறொரு வர்க்கு வலிமை மிகுதியாதற்கு ஏது யாதோவெனின், உள்ளத்தைப் து பலவாறு ஓடவிடாமல் ஒரு துறையில் மட்டுமே உறைத்து நிற்பிக்க மிகப் பழகினவர்க்கு வசிய ஆற்றலும் மிகுதிப்பட்டுத் தோன்றும். இந்தப் பழக்கத்துடன் மூச்சை அடக்கவுந், தமது கருத்தை இறைவன் திருவுருவத்தில் இடையறாது நிறுத்தவும் பழகிக் கொண்டவர்க்கு எல்லையில்லாத வசிய ஆற்றல்

உண்டாகுமென்பது திண்ணம்.

இனி, ஒருவர் பிறர் ஒருவரை உற்றுப் பார்க்குங்காற், பார்க்கப்பட்டவர் பார்த்தவரைக் குற்றமாக நினைத்து அவர்மேல் அருவருப்புஞ் சினமுங் கொள்வரே என்றால், அஃது உண்மை யன்று. உற்றுப்பார்த்தலுக்கும் உறுத்துப் பார்த்தலுக்கும் வேறுபாடு நிரம்ப உண்டு. உற்றுப் பார்த்தலென்பது கருத்தை ஒருவழிப்படுத்தி அமைதியான நோக்கத்தோடும் னிதாக

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_4.pdf/81&oldid=1576033" இலிருந்து மீள்விக்கப்பட்டது