உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 4.pdf/80

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மனிதவசியம் அல்லது மனக்கவர்ச்சி

47

இமைத்தல் இல்லாமல் திறந்தவாறேயாய் நின்று விளங்குகின்றன. அவ்வாறின்றி மக்கள் மனமானது இடைவிடாது ஓடிஓடிவழிதுறை தெரியாமல் திரிவதனாலன்றோ, அவர்கள் கண்களும் டைவிடாது இமைத்துக் கொண்டே யிருக்கின்றன.

இனி, ஓயாது இமைத்துக் கொண்டிருக்கும் நம்

முடைய கண்களைத் திடீரென இமையாமல் நெடுநேரம் நிறுத்திவிட்டால், அதனால் நம் ஊனக்கண்கள் பழுது பட்டுப் போகும். ஆகையால் திடீரென நிறுத்தப் பழகாமல் அவற்றைச் சிறிது சிறிதாக நிறுத்தப் பழகிவரல் வேண்டும். முதன்முதல் வெண்மையான சுவரில் நீல மையினால் ஒரு நாரத்தம்பழம் அவ்வளவு வட்டமான ஒரு வடிவு தீட்டல் வேண்டும். அங்ஙனந் தீட்டப்படும் வடிவானது தன் பார்வைக்கு நேராக அமைக்கப் படுதல் வேண்டும். நின்ற நிலையிற் பார்வை செல்லுதற்கு நேராகவேனும் நாற்காலியிற் உட்கார்ந்த நிலையிற் பார்வை செல்லுதற்கு நேராகவேனும் அவ்வடிவு சுவரில் இருக்கலாம். நின்றாலும், நாற்காலியில் இருந்தாலும் முதுகு கூனாமல் நேராக நிற்றல் வேண்டும். இங்ஙனம் இருக்கும் நிலையில் ஆடாமல் அசையாமற் கண்களைப் பரக்கத் திறந்து, அமைதியோடுஞ் சுவரில் உள்ள நீலவட்டத்தை இமை யாமற் பார்க்க வேண்டும். துவக்கத்தில் மூன்று நிமிஷ நேரம் பார்த்தல் போதும். இவ்வாறு காலைமாலை இரண்டு வேளையுந் தன்னந்தனியே ஓர் அறையில் இருந்து கொண்டு மூன்று நாட் செய்து வருக. அதன்பின் சுவரில் தீட்டிய நீலவட்டத்தை வரவரச் சிறிதாக்கி வருவதோடு, அதனை உற்றுப் பார்க்கும் நேரத்தையும் படிப்படியே மிகுதிப்படுத்தி வருதல் வேண்டும். இவ்வாறு அந்த நீலவட்டத்தை ஒரு கடலையளவுள்ளதாகச் செய்து, அதனை ஒரு கால்மணி நேரம் வரையிற் கண்ணிமை யாமல் உற்றுப் பார்க்கப் பழகிய பின்னர், நல்ல ஒரு தெளிவான கண்ணாடியிற் கறுப்பு மையினாற் கடுகளவு ஒரு சிறு புள்ளியை இட்டு, அதனை அரைமணி நேரத்திற்குக் குறையாமல் உற்றுப் பார்க்கப் பழகிக் கொள்ளல் வேண்டும். இங்ஙனமெல்லாம் பழகவே, கண்களிலுள்ள நரம்புகள் வலிவடைவதுடன், அந் நரம்புகளோடு தொடர்புடைய மூளையின் பகுதியும் வலிவெய்தி அதனோடு ஒற்றுமைப்பட்டு நிற்கும் உயிரின் மனமும் வலிவுகூடி ஒன்றிலே உறைத்து நிற்கவல்லதாகும். கண்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_4.pdf/80&oldid=1576032" இலிருந்து மீள்விக்கப்பட்டது