உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 4.pdf/79

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

46

மறைமலையம் – 4

இடந்தருகின்றது.பத்துப்பாட்டு முதலான பழைய செந்தமிழ்ப் பாட்டுகளில் உள்ள இரண்டு அடிகளுக்கு இக் காலத்தார் பாடும் இரண்டிலக்கம் பாட்டுகள் கூட ஈடாகமாட்டா. ஏன் என்றாற், பழைய புலவர்கள் தமது அறிவை ஒருவழியில் நிறுத்தும் ஆற்றல் வாய்ந்தவர்கள். கண் முதலிய பொறிகளாற் காணப்பட்ட பொருள்கள் ஒவ்வொன்றையும் ஆழ்ந்தறிந்து அவற்றின் அமைவுகளை முற்ற உணர்ந்தவர்கள் பிற்காலத்தவரோ அவ்வுணர்ச்சி இல்லாமல் முன்னோர் சொன்னவற்றையே திருப்பித் திருப்பிக் குழறுபடையாய்ச் சொல்லுங் கிளிப் பிள்ளைகள். ஆகையினாலேதான் பின்னோர் பாட்டுகள் முன்னோர் பாட்டுகளைப் போற் சிறப்படைவதில்லை என்க.

மேற் சொல்லியவாறு உலக இயற்கைப் பொருள் களை உற்றுப் பார்க்க பார்க்க, இதற்கு முன்னெல்லாம் பலவாறு ஓடிச் சிதறிப்போன நம் நினைவுகளானவை இனி அங்ஙனஞ் சிதறாமற் குவிந்து நின்று துலக்கமுற்று விளங்கும். நம் அறிவானது கண்வழியே சென்று ஓர் அழகிய பொருளை உற்றுப் பார்க்குங்கால் நம்முடைய கண்கள் சிறிதும் இமையாமல் திறந்தபடி யே நிற்றலைக் காண்கின்றோம் அல்லமோ? இன்னும் நம் அறிவானது ஒன்றனை ஆய்ந்து அறியுங் காலத்தும் நம் கண்கள் சிறிதும் இமையாமல் திறந்தபடியே நிற்றலையும் வழக் கத்தில் அறியலாம். இதனால், அறியப்படும் உண்மை யாது? நமதறிவு ஒருவழிப்பட்டு நிற்கும் போதெல்லாம், நம் மனம் எங்குஞ் சென்று அலையாமல் அமைந்து நிற்குங்காலெல்லாம் நம்முடைய விழிகள் இமையாமல் நிற்கும் என்பதும், ஆ கவே கண்களை அடிக்கடி இமையாமல் திறந்தபடியே வைத்துப் பழக்குவது மனத்தை ஒருவழிப்படுத்துதற்கு ஏற்ற முறையா மென்பதுமே யன்றோ? இவ்வுண்மையை உணர்த்துதற்கன்றோ மக்களினும் உயர்ந்த தேவர்கள் இமையா நாட்டத்தின ரென்று சொல்லப்படுவாராயினர்? தேவர்கள் நம்மினும் உயர்ந்தவர்களானது எதனால்? தமதறிவை ஒரு வழியில் நிறுத்தியதனாலேயாம். அவர்கள் அறிவு மக்களறிவு போல எந்நேரமும் பல துறைப்பட்டு ஓடி வலிவு குன்றாமல், ஓடி எந்நேரமும் இறைவன் திருவருள் ஒளியையே நாடி அதன்கண் உறைத்து நிற்றலினாலேயே அவர் கண்களுஞ் சிறிதும்

T

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_4.pdf/79&oldid=1576031" இலிருந்து மீள்விக்கப்பட்டது