உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 4.pdf/89

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

56

5. 616001600TLD*

இனிக், கண்ணை அடுத்தடுத்து மைக்கவிடாது நடுநேரம் ஒன்றை உற்றுப் பார்க்கும்படி பழகியபின், அதனோடு ஒருங்கியைந்து நிற்கும் மனமும் பலமுகமாய்ச் சிதறியோடாது ஒருவழிப்பட்டு நிற்கும் மனஓட்டந் தவிரப் பெறுவதே உயர்ந்த நிலையை அடைய வேண்டுவார்க்கு ஒரு சிறந்த வழித்திறப்பாகும். என்றாலும், வசிய ஆற்றல் மிகப் பெறுதற்கு இன்னுஞ் சில உயர்ந்த பழக்கங்களும் இன்றியமையாது வேண்டப்படுகின்றன. மனந்தான் கண்ணில் உறைந்து நின்றாலும், அம் மனத்தினுள் ளிருந்து இயங்கும் உயிரின் எண்ணமானது ஒரு துறைப்பட்டு நிற்பதில்லை. உலகத்துப் பொருள்கள் பலவற்றையும் உயிர்கள் பலவற்றையும் விட்டுவிட்டு எண்ணிக்கொண்டேயிருக்கும். இதுபற்றியே “உண்பது நாழி யுடுப்பது நான்கு முழம், எண்பது கோடி நினைந்தெண்ணுவன கண் புதைந்த, மாந்தர் குடிவாழ்க்கை” என்னுந் திருமொழியும் எழுந்தது. இங்ஙனம் பலவற்றையும் பற்பல காலும் எண்ணி எண்ணி நாட்கழிப் பார்க்கு எந்த எண்ணமுங் கைகூடி வருவதில்லை. முதன்மையாக ஓர் எண்ணத்தையே கடைப்பிடித்து அதனை நிறைவேற்று தலிலேயே உறைத்து நிற்பார்க்கு உலகத்தில் ஆகாதது ஒன்று மில்லை. அங்ஙனமாயின் ஓரெண்ணத்தையே கடைப்பிடித் திருப்பவர் அதனை நிறைவேற்றுதற்குப் பலவகை வழிகளை யெல்லாம் ஆராய்ந்து பார்க்குங்கால், அவர் அதன்கண் மட்டுமேயன்றி வேறு பல எண்ணங்களிலுங் கருத்தை ஓ வி வேண்டுமாகலின், ஓரெண்ணத்திலேமட்டும் அழுந்தி நிற்றல் எவ்வாறு கூடுமெனின், அதனைச் சிறிது விளக்கிக் காட்டுவாம். ரெண்ணத்திலே உறுதியாய் நிற்பவர் அதனை நிறைவேற்றுதற் பொருட்டு வேறு பல எண்ணங்களிலுங் கருத்தை

6

will

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_4.pdf/89&oldid=1576041" இலிருந்து மீள்விக்கப்பட்டது