உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:செவ்வாழை, அண்ணாதுரை.pdf/110

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சாருபாலா 111 ஏன்! ஐ. ஏ. எஸ். பிடிக்கிற வேலை நடக்கவில்லை போலிருக்கு! "உன்னோட ஜாதகப்பலன் அப்படி இருக்கு, சாரு! நான் என்ன செய்ய...நானும் என்னென்னமோ 'பிளான்' போட்டுப் போட்டுப் பார்க்கிறேன்; பலிக்கல்லே. ஆசாமி என்னமோ அழகாகத்தான் இருக்கே? எனக்கோ வயசாயி டுத்து. ‘ஆனா என்னவாம்! தசரத மகாராஜன் கைகேயியைக் கலியாணம் செய்து கொண்டது அவருடைய வயோதிகப் பருவத்தில்தானே..." ‘'ஏண்டி சாரு! அவனைக் கைகேயி ஆட்டிப் படைச் எண்ணமிட்டு சதுபோல என்னை நீ ஆட்டிப் படைக்க விட்டாயோ,,," " ‘ஆசையைப் பாரு, ஆசையை!" இப்படியெல்லாம் இருவருக்கும் சரளமான பேச்சு நடக் கும். 'கோந்தை'யின் சமர்த்துக் கண்டு தாய் மகிழ்வதும், 'தோப்பனார்' சபாஷ் போடுவதும் அந்தக் குடும்பத்தின் அலாதியான முறையாக இருந்து வந்தது. “சாருவுக்கு அடிக்கடி ஏன் சளி ஜூரம் வர்ரது பாட்டி! நோக்கு என்னென்னமோ வைத்தியமெல்லாம் தெரியுமே. ஏன், சாருவுக்கு ஜுரம் வராமப்படிக்குச் செய்யல்லே..." என்று அடுத்தாத்து ஆண்டாள் கேட்பதுண்டு. “ஏண்டி வராது சளி ஜுரம்! ஜுரத்தோடா போகும்? கை கால் பிடிப்பு, கண்ணிலே மஞ்சள், குடல் வாதம், எல் லாம்தான் உரும். காலா காலத்திலே ஆக வேண்டிய காரியத் தைச் செய்யாமப் போனா, இதுதான் கதி. நேக்கு இவ வயதிலே, இரண்டு குழந்தைகள்! இவ, பாரேன், ஆட்டக் செய்யப் குதிரை மாதிரி ஆடிண்டு, என்னமோ சேவை போறேன்னு சொல்லிண்டு திரியறா! உடம்புக்கு வராமப் போகுமோ" என்று அனுபவ வைத்யசிந்தாமணியானபாட்டி சொல்லிவிட்டு, இவ மட்டுமா! இந்தக் காலத்துப் பெண்