உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:செவ்வாழை, அண்ணாதுரை.pdf/114

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சாருபாலா 115 அவள் கன்னத்தைத் தடவிக் கொடுத்துக் கொண்டபோது தான் டாக்டர் இரகுராமனுக்கு, அந்த நினைவு வந்தது. அவன் கேட்டது, அவள் தலை 'வகுட்டில்' இருந்த ஒரு சிறு 'வடு' வைப் பற்றி! அதை அவள் பிறகு விளக்கினாள்! " இதுவா! சமூக சேவையின் பரிசு. 'பரிசா?" 'ஆமாம்! ஏழூரில், ஒரு குடிசையின் மேற்கூரையைத் தாங்கிக் கொண்டிருந்த இடத்தின் சுவர் கலனாகிக் கிடந் தது — அந்த 'அப்பாவி' அதைக் கவனிக்காமல் இருந்தான். நான்தான் அதைக் கண்டுபிடித்து, புதிதாகச் 'சாந்து' பூசி னேன் -- அப்போது, ஒரு மரக்கட்டை தலையில் பட்டது. அந்த 'வடு'தான்—சமூக சேவையின்போது கிடைத்த பரிசு' என்று சாரு சொன்னாள். "இரத்தம் நிரம்பக் கசிந்ததா சாரு! இந்த வேலை யெல்லாம் ரொம்ப ஜாக்ரதையாகச் செய்ய வேண்டும். மடையன், உன் தலையில் 'கட்டை' விழுந்தபோது சும் மாவா இருந்தான்?" என்று கேட்டார் டாக்டர். "சார், சார்!" என்ற குரல் கேட்டது. கம்பவுண்டர் குண்டப்பன் எப்போதும் இப்படித்தான், 'சிவபூஜைக்கரடி' என்று மனதிலே எண்ணிக் கொண்டு, டாக்டர் இரகுராமன், கீழே சென்றான். "சாமியோய்! ஒரே கொழந்தைதாங்க... கொலக் கொடி... தவமாத்தவமிருந்து பெத்ததுங்க.. இந்த அநியா யத்தைப் பாருங்க சாமி... என் வயித்திலே பால் வாருங்க டாக்டர்..." என்று அழுது கொண்டே கூறினான், பட்டிக் காட்டான் - அவன் அங்கொரு பெஞ்சில் படுக்கவைத்திருந்த நாலு வயதுக் குழந்தையின் மண்டை நொறுங்கி, இரத்தம் குழைந்து கொண்டிருந்தது; ஆபத்தான நிலைமை. டாக்டர் இரகுராமன் குழந்தையின் கோரமான நிலை மையைக் கண்டு, உள்ளபடி பச்சாதாபப்பட்டான். கம்பவுண்