உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:செவ்வாழை, அண்ணாதுரை.pdf/115

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

116 சமூக சேவகி டர், குழந்தைக்குச் செய்ய வேண்டிய சிகிச்சைக்குத் தேவை யான ஏற்பாடுகளில் ஈடுபட்டான். "ஏன் இப்படி? என்ன நடந்தது? "கொழந்தை படுத்துத் தூங்கிக் கொண்டிருந்ததுங்க டாக்டர்! என் போறாத வேளை, கூரைப்பக்கமிருந்து, சுவர் வெடித்து ஒரு பாளம் விழுந்தது. கொழந்தை தலைமீது. "மடையாகளாடா நீங்கள்!பாளம் விழும்போது என்ன செய்து கொண்டிருந்தீர்கள்? "பால் கறந்து கொண்டிருந்தேன் டாக்டர்!கொழந்தை 'கோன்'னு கூச்சல் போட்டதும் தோட்டத்திலே இருந்து ஓடி வந்தா; கொழந்தை இந்தக் கோரமாக இருந்தது; அவ என் வூட்டுக்காரி வெளியே போயிருந்தா...' "கவர் எப்படிடா வெடித்து பாளம் விழுந்தது.ஏன் அப்படிப்பட்ட ஆபத்தான நிலையிலே சுவர் இருக்கவிட்டு வைத்தே..." “அதை ஏன் டாக்டர் கேட்கறிங்க. என்னமோ வீடு ரிப்பேர் செய்கிறோம், காசு செலவில்லாமேன்னு சொல்லி கிட்டு வந்தாங்க, பட்டணத்துப் பொம்பளைங்க. வேண் டாயமா, எங்களுக்குக் காசு கிடைச்சா, நாங்களே செய்து கிடுவோம்; எங்களுக்குத்தான் எப்படிச் செய்யறதுன்னு தெரி யும். நீங்க அதை எல்லாம் என்னத்தைக் கண்டிங்கன்னு, எவ்வளவோ எடுத்துச் சொன்னேனுங்க. ஒரு துடுக்குக்காரப் பொண்ணு, 'டே! நாங்க உதவி செய்ய வந்தா தடுக்கறயா நீ? நாங்க எல்லாம் யார் தெரியுமா? சர்க்காரோட ஆளுங்க! சம்பளம் வாங்காம வேலை செய்கிறவங்க! எங்களைத் தடுத்தே, அவ்வளவுதான். உன்னைப் போலீசிலே சொல்லி தண்டனை வாங்கித் தருவோம்'னு மிரட்டிச்சி. உங்களுக்கு ஏம்மா இந்த வேலையெல்லாம்! உங்களோட பங்களா, தோட் டம், காடு, கழனி இங்கெல்லாம் வேலை செய்யறதுக்கே, எங்களாட்டம் ஆளுங்கதானே தேவைப்படுது. நீங்க என் னமோ, கொல்லன் தெருவிலே ஊசி விக்கிற மாதிரி, எங்க