உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:செவ்வாழை, அண்ணாதுரை.pdf/116

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சாருபாலா 117 இடத்திலே எங்க வேலையைச் செய்ய வருகிறீங்க.நல்லா இல்லேம்மான்னு நல்லதனமாச் சொன்னேன். அதட்டிப் பேசின பொண்ணு, உடனே சிரிச்சுப் பேச ஆரம்பிச்சு, பெரியவரே! நாங்க எப்படியும் முப்பது குடிசையைச் சீர் திருத்தம் செய்தாகணும். எங்க சங்கத்தோட திட்டம் அது. தடை சொல்லதே"ன்னு கேட்டுகிட்டு, சேறு கொண்டா, சுண்ணாம்பு எடு, கல் எடு. அப்படி இப்படின்னு சொல்லி, நல்லா இருந்த சுவரைச் 'சாந்து' பூசறேன்னு சொல்லி, கெடுத்துவைத்துட்டுங்க; நாலு நாளைக்கு முன்னே மழை வந்ததுங்களா, அவ்வளவுதான்! பூச்சு வேலை கரைஞ்சு போச்சு;பாளம் விழுந்து என் கொழந்தை இந்தக் கதியாச்சி" என்றான். கம்பவுண்டர், டாக்டரைத் தனியாக அழைத்து, ஏதோ இரகசியமாகச் சொன்னான்.டாக்டர் முகத்தில் ஈயாட வில்லை. கம்பவுண்டர், கிராமத்தானைப் பார்த்து, "குழந் தையை பெரிய ஆஸ்பத்திரிக்குக் கொண்டு போ! இங்கே ஒண் ணும் செய்வதற்கில்லை" என்று கூறிவிட்டான். 'ஐயோ தெய்வமே!' என்று அலறியபடி, குழந்தையை வாரி எடுத் தான் கிராமத்தான்; வாழைத்தண்டு போல ஜில்லிட்டுக் கிடந்தது.