உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:செவ்வாழை, அண்ணாதுரை.pdf/130

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நரகம் 131 தைக் கெடு- இந்த அரசனை ஆலிங்கனம் செய்து அடிமை. யாக்கு என்று நமக்குக் கட்டளையிடும்போது, நாம் சிரம மாக இருக்கிறது; வேறு வேலை நிரம்ப இருக்கிறது என்று ஏதாவது மறுப்பு சொன்னால், இவ்வளவுதானே! உங்கள் உதவியே வேண்டாம்; இந்தத் தவசியின் 'நிஷ்டையைக் கலைக்க இதோ நானே 'மோகினி' யாகிறேன் பார் என்று மகாவிஷ்ணு கூறிவிடுவாரல்லவா..." . 'தாராளமாக! அந்த 'மகா சேவையை இந்தக் கட வுள்களே தங்கள் ஏகபோக உரிமையாக வைத்துக்கொள்ளட் டும் - இந்த இடத்தைவிட்டுப் போய்விட வழி செய்து கொடுத் தால் போதும்; நமக்கு ஏற்றவன், ஒரு நாணயஸ்தன், பூலோ கத்தில் கிடைக்கவாமாட்டான்—அவனோடு காலந் தள்ளு வோம். அமிர்தமும் வேண்டாம்; ஆபாசம் புரியும் இந்த வாழ்க்கையும் வேண்டாம்." நம்மால் இங்கே உட்கார்ந்து கொண்டு, இதுபோல முணுமுணுத்திட மட்டுமே முடிகிறது; முடிவு எடுக்க வேண் டிய கட்டம் வந்ததும் மீண்டும் நமக்குச் சபலம் பிறந்துவிடு கிறது. சதங்கையைத் தேடிக் காலில் அணிந்து கொண்டு இந்திர சபையில் ஆடி அதனால் ஏற்பட்ட அலுப்புத் தீரு வதற்குள், எவனாவது தேவன் இளித்தால் அவனுக்கு இறை யாகிறோம். பூலோகத்தில் மாதவி என்றோர் மடந்தை- கணிகையர் குலம்தான். கனவான் எவனுக்காவது காமக் கிழத்தியாகி அவனுக்குக் களிப்பூட்டிக் காலந்தள்ள வேண் டிய விதிதான அவளுக்கு. அழகு, இளமை, கவர்ச்சி இவற் றுடன் அவளிடம் கலையும் பூரணமாக இருந்தது; அரசன் அவையில் அவள் ஆடியபோது, அனைவரும் ஆஹா ஹார மிட்டனர். கோவலன் எனும் வணிக இளைஞன், அவளிடம் காதல் வேண்டிப் பெற்றான். இருவரும் இன்ப வாழ்வு பெற்றனர். பிறகு அவன் காரணமற்று அவளிடம் கோப மடைந்து அவளை விட்டுப் பிரிந்தான்—கணிகைதானே அவள் - பாபப்பிண்டம் என்கிறார்கள் அவளை! பழி சேரும் இடம் என்கிறார்கள் அவள் மனையை...! அப்படிப்பட்ட மாதவி, தன்னை மகிழ்வித்து வந்த இன்னுயிரானை யான்