உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:செவ்வாழை, அண்ணாதுரை.pdf/131

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

132 சொர்க்கத்தில் தன்னைவிட்டு நீங்கி பிறகு பயங்கரமான ஒரு சூழ்நிலை காரணமாகக் கொல்லப்பட்டுப் போனான் என்று கேள்விப் பட்டதும் என்ன செய்தாள் தெரியுமா அந்த மாதவி? நாமும் இருக்கிறோமே இங்கு புதனை விட்டால் வியாழன், சூரி யனை விட்டால் சந்திரன் என்று; இப்படி கைமாறியபடி அப்படியா செய்தாள் அந்த ஆடலழகி—அவர் என் மனதுக் கிசைந்தவர்--எனவே என் மணாளர்--அவர் மடிந்தபின் மாதவியும் மடியத்தான் வேண்டும். அதுதான் அறம் ஆனால் என் கருவில் வளரும் குழவியை உலகுக்கு அளித்திடும் கடமை ஒன்றுளது. அதனை நிறைவேற்ற மட்டும் நான் உயிர் துறக்கா திருக்கிறேன் - எனினும் கோவலன் இறந்தபின் அவ னுடன் கொஞ்சி விளையாடி கோலமயில் போலாடி, அவன் திருவாயால் கோ, மளமே! அஞ்சுகமே! என்று கொஞ்சுமொழி கேட்டு, அவனுடன் தென்றலைச் சுவைத்து, தேனமுது உண்டு, மாலை மதியத்தின் போது 'மாசில் வீணையை மீட்டி மதுரகீதம் அவர் பாட, மலர்க் கொடிபோல் தான் ஆட இருந்து வந்த காதல் வாழ்வைப் பெற்றிருந்த மாதவி, இனி யும் இருத்தல் அறமாகாது— அந்த மாதவி, சிரித்து விளை யாடிய சிங்காரி,நயனம் காட்டி நவரசம் ஊட்டி நடனமாடிய நாரீமணி, எவ்வகையாச இன்று அலங்காரம் செய்து கொண் டால் என் இதயநாதனுக்கு மகிழ்வளிக்கும் என்று கண்ட றிந்து அதன்படி கவர்ச்சியைக் கொண்டு கொட்டி, காத லின்பத்தை ஊட்டிய மாதவி மடிய வேண்டியதுதான் என்று தீர்மானித்தாள். மலரைத் துறந்தாள் அந்த மலர் முகவதி! ஒளியைத் துறந்தன கண்கள்! பளபளப்பை இழந் தது மேனி! தைலத்தை இழந்தது, அவள் கார்நிறக் கூந்தல்! புன்னகை போன இடம் தெரியவில்லை. ஒரேநாளில் ஒளவை யானாள்! மாளிகையை வெற்றிடமாக்கினாள். இருந்த பொருளையெல்லாம் வறியருக்கு அளித்தாள்--புத்த சமயம் புகுந்தாள். இது பூலோகத்தில்! கணிகைக்கு இத்தகைய பெருநோக்கு பிறந்தது. அந்த பூலோகவாசிகள் புண்யம் தேடிக் கொண்டு இங்கே வந்து வாசம் செய்யலாம் என்று புராணிகளை ஏவிக்கூறச் செய்கிறார்கள், நம்மைக் காமச் சேற்றில் உழலவிட்டிருக்கும் உத்தமர்கள்..."