உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:செவ்வாழை, அண்ணாதுரை.pdf/132

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நரகம் "நாம் மட்டும் காமச்சேற்றில் உழல்கிறோம். 31 133 அந்தத் தேவலோகத்தை மேலானது என்று எண் ணிக் கிடக்கிறார்களே இந்த ஏமாளிகள் என்று எண்ணும் போது, எனக்கும் வேதனையாகத்தான் இருக்கிறது. ஒரு நாள் இதைப் பூலோகத்தாருக்குக் கூறிவிட வேண்டும் என்று கூட எனக்குத் தோன்றுகிறது" என்றாள் திலோத்தமை. அதற்கு நாம் கொடுத்து வைக்கவில்லையே! திலோத் தமா ! நம்மை பூலோகம் சென்றுவரச் சொல்வதெல்லாம் யாரையாவது சீரழிக்கச் செய்வதற்கும், ஒழுக்கத்தைக் கெடுப் பதற்கும்தானே" என்று மேனகா சொன்னாள். "நாமெல்லாம் புரட்சி செய்துவிட்டு பூலோகமே போய் விட்டால்..." என்று கேட்டாள் திலோத்தமை. "நம்மாலே முடியுமா? நமக்குத் தெரிந்ததெல்லாம். ஸ்வாமி! நாதா! அன்பே! ஆருயிரே! என்று அடி மூச்சுக் குர லால் பேசுவதும் ஆடிடும் கொடியில் அழகுமலர், என் அங்க மதில் உண்டு இன்பமலர் என்று, காலைத் தூக்கி நின்று ஆடு வதும், கட்டி முத்தமிடுவதும், பாடுவதும், பிறகு பட்டபாட் டினை எண்ணி விம்முவதும் ஆகிய இதுதானே தவிர ஏன் என்று கேட்க, எதிர்த்துப் பேச, புரட்சி செய்யவா தெரியும்' என்று மேனகா இடித்துரைத்தாள். ஆழ்ந்த யோசனையிலி ருந்து கலைந்த நி லையில் ரம்பை, "நம்மால் முடியாதுதான்! ஆனால் பூலோகத்தில் இப்போது அவ்விதமான அறிவாற்றல் வெகுவாகப் பரவிக் கொண்டு வருகிறது. நாம் இருக்கும் இடத்தின் அவலட்சணங்களை எடுத்துக் கூறி மக்களைத் திருத்திக் கொண்டு வருகிறார்கள். புரட்சி வீசுகிறது" என் றாள். கலகலவென மணியோசை கேட்டது ; மூவரும் திடுக் கிட்டுப் போயினர். 'இந்திர சபையில் என் நடனம் இன்று' என்று கூறிக் கொண்டு எழுந்தாள் திலோத்தமை."

"சந்திரனுடைய வெப்பத்தைத் தணிக்க இன்று நான்