உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:செவ்வாழை, அண்ணாதுரை.pdf/151

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

152 சூதாடி மு: போட்டான்! மண்டுவுக்கு, அவன் போடுகிற அஸ்திவா ரத்தை நான் இடிக்கிறேன் என்பது தெரிந்ததா?முதலியாரே! டாட்டா கம்பெனி ஷேர்னா, அது பவுன் மாதிரி. மற்றது களை அப்படிச் சொல்ல முடியாது. ஆனா நீர் வேறு மாதிரி யாத்தான் பேசுவீர். ஏன்னா...." என்று இழுத்தாப்போலப் பேசினேன். உடனே, கோபம் வந்துவிட்டது முதலியாருக்கு. "அப்படியானா, லட்சுமிராஜ்ஷேர் தம்பிடிக்குப் பிரயோஜன மில்லைன்னு சொல்லும்" எனறு சீறினான் முதலியார்! கோபப்படாதீர்கள். என் வாய் கொஞ்சம் அறுதல். நான் புறப்படும்போதே. நாம் வாயைத் திறந்து ஒண்ணும் பேசப் படாது; பேசின:1, நாம் சத்யத்துக்குத்தான் பாடுபடறோம் என்கிற விஷயம் தெரியாமல், முதலியார் நம் மீதுதான் கோபிப்பார்னு நினைச்சேன்.ஆனா,பிறகு, எப்படி நமக்குத் தெரிந்ததை அவரிடம் சொல்லாமலிருப்பது - நமக்கு வந் தால் என்ன, அவருக்கு நஷ்டம் வந்தால் எனன, அவர் நம்ம பால்ய சினேகிதராச்சேன்னு மனசு அடிச்சுண்டது.அதனாலே தான் இந்தப் பேச்சையே ஆரம்பிச்சேன். உமக்குக் கோபம் வர்ரது சகஜம். ஏன்னா, லட்சுமிராஜ் ஷேர், உம்மிடம் ஐம் பதோ நூறோ இருப்பதாகக் கேள்வி எனக்கு... என்று சொன்னேன். 'அட, ஐந்நூறு இருக்கய்யா, அதுக்கென்ன இப்போ? 'லட்சுமிராஜ்' ஷேரை, நீ கிள்ளுக்கீரைன்னு- நினைத்துக்கோ. எனக்குத் தெரியும், அதனுடைய மதிப்பு' என்று மேலும் கோபமாக சொன்னார். சீ: ஆமான்னா, அவன் பிடிவாதக்காரன்... மு: பிடியும் வாதமும்! கேளும் மேற்கொண்டு நடந் ததை. 'முதலியார்! நீங்க, அதற்குப் பேரு லட்சுமின்னும் ராஜுன்னும் இருப்பதாலேயே, மதிப்புக் குறையவே குறை யாதுன்னு நினைக்கிறீரா'ன்னு கேலி செய்து, கோபத்தை இன்னும் கொஞ்சம் ஏற்றி விட்டேன். சீ: துருப்புத் தழையை இறக்கி, எதிர்க்கை ஜாக்கியை கீழே விழவைக்கிற மாதிரியாகச் செய்தீர். மு: கேளுமய்யா, விஷயத்தை. லட்சுமி ராஜுக்கு என்ன குறைன்னு சொல்கிறீர் இப்போ.சீனு இருக்கானே,