உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:செவ்வாழை, அண்ணாதுரை.pdf/152

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சூதாடி 153 அவன் நேத்து தலை கீழாக நின்று பார்த்தான், அதை வாங்க என்று அப்போதுதான், உன் விஷயத்தை ஆரம்பித்தார். சீ: பார்த்தீரா! அவ்வளவு நேரம், என் பேச்சையே எடுக்கவில்லை...” மு: நான் மட்டும் தந்தியை உடனே எடுத்துக் காட்டி னேனா? சீ: எந்தத் தந்தியை? மு: அதுதானய்யா, என மாமியாளுக்கு உடம்பு சரியில் லைன்னு தந்தி வந்ததே நேத்தைக்கு, உமமிடம் காட்டலே நான். சீ: ஆமாம், அந்தத் தந்தி எதுக்கு? மு: அதுதான் ஓய், துருப்பு ஜாக்கியா இருந்தது. கேட் டுண்டு வாரும் விஷயத்தை. முதலியார், லட்சுமிராஜ் பற் றீப் பிரமாதமாகப் புகழ்ந்தான். பிறகு பொறுமையாகச் சகலத்தையும் கேட்டுண்டு இருந்துவிட்டு, 'முதலியார்! இதைப் பாருங்கள்' என்று சொல்லித் தந்தியை நீட்டினேன். வாங்கிப் பார்த்தான் - முகம் வெளுத்துப் போச்சு? சீ: ஏன்? மு: ஏனா? தந்தியிலே என்ன இருந்தது, நீர் சரியாக வாசிக்கலையோ? சீ: உம்ம மாமியாளுக்கு. மு: ஆமய்யா, ஆபத்தா இருக்குன்னு இருந்தது! அது நேக்குத் தெரியும்; உமக்குத் தெரியும்; அவன் கண்டானா அதை. தந்தியிலே என்ன வாசகம் இருந்தது? லட்சுமிராஜ் சிங்கிங் அதாவது, லட்சுமிராஜ் பிராணன் போயிண்டிருக்கு. முழுகிண்டிருக்குன்னு அம்பி தந்தி கொடுத்திருந்தான். முதலியாருக்கு அந்த சூட்சமம் என்ன தெரியும்? லட்சுமிராஜி என்றால், 'ஷேர்' என்று எண்ணிக் கொண்டார் - சிங்கிங் முழுகிண்டிருக்குன்னா, எப்படிஇருக்கும் அவனுக்கு. 'இருக்குங்களா?' என்று பயந்து கேட்டான். அம் பிக்கு நான் சொல்லி வைத்திருந்தேன்; லட்சுமிராஜ் ஷேர் விஷயமா. அதுவும் நீர் அதை வாங்கி இருந்ததாலே, முதலி யார் தெரியாமலா வாங்கி இருப்பார்; நாமும் அதையே