உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:செவ்வாழை, அண்ணாதுரை.pdf/153

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

154 சூதாடி வாங்கிப் போட்டு வைப்போம்னுதான் நினைச்சேன். நேத்து வர்றது இதுமாதிரி தந்தி என்று சொன்னேன். ஒரு நிமிஷத் திலே ஒன்பது தடவை, தந்தியை அடிக்கடி பார்த்தான்- என்ன பண்ணுவான் - தந்தியை மேஜை மேலே வீசினான் பயல்கள் என்னை ஏமாத்திவிட்டான்கள் - லட்சுமி ராஜி, கல் மாதிரி அசையாதுன்னு சொல்லி ஆசை காட்டினார் கள் என்று சோகமாகப் பேச ஆரம்பித்தார். 'ஆமாம், ஷேர் வியாபாரமோருசூதாட்டந் தானே' என்று நான்சொன்னேன். சூதாட்டம் தேவலாம்; இது மகா பெரிய சூதாட்டமாக அல்லவா இருக்கு' என்று ஆயாசப்பட்டார். 'சரிதான், முதலி யாரே! தந்தி எனக்குத்தான் வந்தது! ஊரிலே யாருக்கும் தெரியாது - அம்பிக்கு உன் அளவு தெரியும். அதனாலே அவனுக்கு இரகசியம் முதலிலே தெரிந்துவிட்டது. அதனாலே யாருக்காவது தள்ளி விட்டுவிடும், அந்தச் சனியனை' என் றேன. அவன் யாரையாவது பார்க்கும்படி என்னையே கேட் டுக் கொண்டான். சீ: சரின்னு ஒப்புக்கொண்டீராக்கும். மு: மண்டுவா நான். 'நான் எப்படி முதலியாரே, சத் யத்துக்கு விரோதமாகப் போக முடியும் மனதறிந்து பொய் பேசறதுன்னா..'என்றேன். சரி, எனக்கு ஒரு உபகாரம் செய் யுங்கள், அதுபோதும். 'லட்சுமிராஜி ஷேர் விழுந்துவிட்ட துங்கிற விஷயத்தை மட்டும், வெளியே சொல்லா மலிரும்' என்று கெஞ்சினான். சரின்னு ஒப்புக் கொண்டேன். சீ: பேஷ்! பலே சமர்த்தா முடித்திருக்கிறீர் காரியத்தை. மு: ஆகையினால், நான் மோட்டாரை நிறுத்தச் சொல் கிறேன். இறங்கி, எதிரே பஸ்வரும். ஏறிண்டு நேரே முதலி யாரிடம் போனா, காரியம் பலித்துவிடும்- என்னைப் பார்த்து மூணு நாளாச்சின்னு சொல்லும். கார் நிறுத்தப்பட்டு, சீனு கீழே இறக்கப்பட்டார்— கார் மீண்டும் புறப்பட்டது. "எங்கே,வீட்டுக்கா, கிளப்புக்கா?” என்று கேட்டான் மோசஸ். "வீட்டுக்குத்தான். ஏண்டா மோசஸ் உனக்குப் பசங்க எத்தனை?" என்று ஐயர் கேட்டார்.