உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:செவ்வாழை, அண்ணாதுரை.pdf/154

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சூதாடி .. 155 'மூணு என்று சுருக்கமாகப் பதிலளித்தான் மோசஸ். "மூணு பசங்களுக்குத் தகப்பனாகி இருக்கிற; சூதாட் டத்தை விடமாட்டேன்கிறியே. ஏண்டா, சூதாட்டப் புத்தி இருந்தா எப்படியடா உருப்பட முடியும்." என்று மறுபடி யும் உபதேசம் செய்யலானார். அடிக்கடி மோட்டார் 'ஆரனை' உபயோகப் படுத்தித் தன் கோபத்தை மோசஸ் போக்கிக் கொள்ள முயன்றான். "மோசஸ்! ஒரு விஷய!ம கேள். சூதாடி என்னடா சம்பாதிக்க முடியும். இல்லை. பணமே அதிலே கிடைக்கிறதுன்னே வைச்சிக்கோ, சூதாடிப் பிழைக்கிறது ஒரு பிழைப்பாகுமா- மோசஸ்?... என்று ஐயர் சூதாட்டத்தின் தீமைகளை விவரிக்கலானார். மோசஸ் சலிப்பும், கோபமும் கொண்டவனாய், அவர் வார்த்தைக்கு, 'உம்' கொட்டவில்லை. ஐயர், "ஏண்டா மோசஸ்! நான் சொல்றது காதிலே விழலையா?" என்று கேட்டார். ஒரு சிரிப்புடன் மோசஸ் சொன்னான், "நான் செவிடனல்ல; நீங்க பேசறது நல்லாக் காதிலே விழுகிறது என்றான். அவன் கோபித்துக் கொண்டான் என்று ஐயர் தெரிந்துகொண்டார். ஆனால் அவன் கோபத்துக்குக் காரணம் தெரியாது அவருக்கு. சூதாட்டத்தைக் கண்டிப்பவர் நடத்திய சூதாட்டத் தைப் பற்றி அவரே பெருமையாகச் சீனுவிடம் பேசியதை மோசஸ் கேட்டுக் கொண்டுதானே இருந்தான். அத்தகைய இலாபச் சூதாட்டக்காரர், பொழுதுபோக்குக்காகவும், மன திலே கொஞ்சம் கிளர்ச்சி வேண்டுமென்றும், சீட்டு ஆடு வதைச் சூதாட்டம் என்று சொன்னால் அவனுக்குக் கோபம் வராமலிருக்குமா? அவன் செவிடனா, சீனுவும் முத்துசாம் ஐயரும் பேசினது காதில் விழாமலிருக்க!நன்றாகக் கேட்டது. ஆனால் அவன் பேச முடியாதே! ஊமையல்ல; ஆனால் ஊழியக்காரன்! எப்படியோ முதலாளி முதல்தரமான சூதாட் டக்காரர் இஸ்பேட்- கிளாவர் போன்ற சீட்டுகளில் அல்ல, லட்சுமிராஜ் காமதேனு காந்தா முதலிய ஷேர்களைச் சீட்டுகளாகக் கொண்ட சூதாட்டக்காரர் என்ற உண்மையை எப்படிப் பேசமுடியும்?