உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 5.pdf/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

12

மறைமலையம் – 5

உள்ளத்திலும் எம் ஆசிரியரைப் பற்றிய நினைவினை உடனே எழுப்பி விட்டது. இக்காலத்திற் கம்பி வழியாக விடுக்கப்படுஞ் செய்தியானது மிக விரைவாகச் சென்று நெடுங்தொலைவி லுள்ளார்க்கும் அறிவிக்கப்படுதலை எல்லாரும் அறிந்திருக் கின்றார்கள். ஆனால், அக் கம்பியினும் விரைவாகச் சென்று நமது நினை வானது ஓர் இமை கொட்டும்முன் பிறர்க்கு நாம் கருதியதை உணர்த்தும் புதுமையினை எவரும் நினைந்து பாராததும், எவ்வகை யுதவியும் வேண்டாமல் நமது நினைவு கடந்து செல்லவிடும் ஆற்றலைத் தம்மிடத்து மிகுதிப்படுத்திக் கொள்ளாததும் ஏனோ? மின்செய்தி விடுப்பதற்குக் கம்பி வேண்டும்; அம் மின்செய்தி விடுக்கத் தெரிந்தவர்கள் உதவி வேண்டும்; அவர்க்குப் பொருள் தரல்வேண்டும். ஆனால், நமது நினைவைச் செலுத்துதற்கோ எதனுதவியும் நமக்கு வேண்டு வதில்லை. நம்முதவியே நமக்கு வேண்டும், தவ முயற்சியில் முதிர்ந்த பெரியார்கள் தாம் இருந்தவிடத்திருந்தே உலகமெங்கும் உள்ள தம் மாணக்கர்க்குத் தம் நினைவுகளைத் தெரியப் படுத்துகின்றார்கள். வடநாட்டிற் பல ஆண்டுகளுக்கு முன் போர்வினைஞர் கலகம் நடந்தபோது, நம் அருந்தவத் தோரிற் சிலர் அதிற் றலையிட்டிருந்தார்கள் என்றும், அவர்கள் மலை முழைஞ்சுகளில் நெடுந்தொலைவில் இருக்கப், படைஞர் களொடு கலந்திருந்த அவர்களின் மாணாக்கர்கள் போர்க் களத்தில் நிகழ்வனவற்றை ஓர் இமைகொட்டுமுன் தங் குருமார்களுக்கு அறிவிப்பரென்றும், அது தெரிந்த குருமார்கள் தம் மாணாக்கர் நடக்க வேண்டு முறை இதுவென ஓர் இமைப் பொழுதில் திரும்ப அறிவிப் பார்களென்றும், இம் மறைவு களைத் தெரியாமல் வெள்ளைக்காரர் மிக வியந்து திகைப் படைவ ரென்றுங் கற்றறிந்தேம். இன்னும் எமது மலையகத்தில் எம் அன்பின்மிக்க மனையாளும் யாமும் ஒருவர் நினைப்ப தனையே மற்றவரும் நினைப்பதும் அடிக்கடி நிகழா நிற்கின்றது. எமதறிவு நிகழ்ச்சியில் நிகழும் இன்னோரன்ன நிகழ்ச்சிகள் பலவாயினும், அவற்றை இங்கெடுத்துக் குறித்தலினும், பிறர்தம் அறிவு நிகழ்ச்சிகளை மொழிதலே பொருத்தமாமென்று எண்ணி அவற்றையிங்கே மிக வெடுத்துக் கூறிற்றிலேம். அது நிற்க.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_5.pdf/45&oldid=1576485" இலிருந்து மீள்விக்கப்பட்டது