உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 25.pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




தாயகத்தின் அழைப்பு

5

என் வண்டியின் ஆதரவுடன் ஆங்கிள்பரியிலிருந்து ஏற்றி வருகிறேன்” என்று கூறிக்கொண்டே காவிக்காரன் முன்போல மீண்டும் வண்டியினுள் எட்டிப்பார்த்துவிட்டு வந்து, தனக்குள் கூறுபவன் போல ‘பாவம்! அயர்ந்து தூங்குகிறாள். அழுதழுது ஓய்ந்துவிட்டாள், நன்றாக இளைப்பாறட்டும்” என்றான்.

காவிக்காரன் பேச்சு கிழவன் ஆர்வத்தை இன்னும் கிளறிற்றே தவிரக் குறைக்க முடியவில்லை."ஆங்கிள்பரியிலிருந்தா? அவள் யார்? எந்த இடத்துக்குச் செல்கிறாள்? என்ன அவள் துயர்?” என்ற பல கேள்விகளை அவன் அடுக்கினான்.

காவிக்காரனுக்கு இக்கேள்விகளும் ஆர்வமும் கட்டோடு பிடிக்கவில்லை. ‘இதுவரை இவன் பேச்சுக்கு இடங்கொடுத்ததே தவறு. தன்னால் மதிப்பும் ஆதரவும் அளிக்கப்பெற்ற நங்கையின் செய்திகளைத் துளைத்தறிய இவன் யார்?' என்று அவன் எண்ண மிட்டான். ஆகவே சற்றுக் கண்டிப்பான குரலில் “அதெல்லாம் இப்போது கூறிக்கொண்டிருக்க நேரமில்லை - தேவையுமில்லை. அது என்னைப் பொறுத்த செய்தியுமல்ல. மேலும் நான் குதிரைகளுக்குச் சிறிது ஓய்வு கொடுத்துத்தான் வரவேண்டும். நான் நின்றுதான் வரப்போகிறேன். நீங்கள் சென்று வாருங்கள்" என்றான்.

கிழவன் சிறிது சுண்டிய முகத்துடன் சப்புக் கொட்டிக் கொண்டு சென்றான். காவிக்காரன் வண்டியை அவிழ்த்து விட்டுக் குதிரைகளுக்கு இரண்டு சிரங்கை உணக்கற்புல் எடுத்துப் போட்டான். கிழவனையே பார்த்த வண்ணம் அவன் ஏதோ சிந்தனையிலாழ்ந்தான். கிழவன் வடிவம் விரைவில் ஒரு புள்ளியளவாகக் குறைந்து இருளில் இருளாய் மறைந்துவிட்டது.

'காதல்! இன்று அந்தப் பேச்சுக்கு இடமில்லைதான். ஒரு காலத்தில் அந்தக் கனவு இல்லாமலில்லை. பணத்துக்காக ஏற்றுக் கொண்ட இந்தத் தொழில் வறுமையைப் போக்கிற்று, ஆனால் பாவையை எட்டாத் தொலையாக்கி விட்டது' என்று அவன் எண்ணமிட்டான். ஆனால் அந்தப் பழைய எண்ணத்தைப் பற்றி இப்போது அவனுக்கு அவ்வளவாகக் கவலையில்லை. அவள் துயரம்தான் அவனைக் கலக்கிற்று. அவள் அவன் வண்டியின் உதவியையும் அதன் மூலம் தனக்கு மறைவையும் ஓய்வையும் கோரினாள். அக்காட்சி அவனை உருக்கிற்று. அவன் உள்ளக்