உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 25.pdf/25

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




4

||---

அப்பாத்துரையம் - 25

ஆடைக்குப்புறமே தெரிந்த மேனியிலும் தோய்ந்திருந்தது.அவன் ஒரு காவிக்காரன் என்பதை இது தெளிவாகப் புலப்படுத்திற்று. புதர் நிலமக்கள் இன்னும்கூடக் கால்நடைகளுக்குக் குறியிடக் காவி மண்ணைத்தான் பயன்படுத்தி வந்தனர். அத்தொழிலில் பணம் எளிதாகப் புரண்டது. ஆகவே உயர் நடுத்தர வகுப்பினர் கூட அதில் பெரும்பாலும் ஈடுபட்டனர். எனினும் அவர்கள் நாடோடி வாழ்வும் கிட்டத்தட்ட நிலவரமாகிவிட்ட அவர்கள் காவிநிற மேனியும் அவர்கள் வாழ்வை மக்கட் சமூகத்திலிருந்து ஒதுக்கி வைத்திருந்தது. குழந்தைகளை அச்சுறுத்தத் தாய்மார்கள் அந்நாளில் நெப்போலியன் பெயரை வழங்குவர்; அல்லது காவிக்காரனையே பூச்சாண்டியாகச் சுட்டிக் காட்டுவர். கிழவன் கண்ட காவிக்காரன் இத்தகைய செந்நிறப் பூச்சாண்டியாகவே தொலைவில் தோற்றினான். ஆனால் அணுகிப் பார்த்தபோது அந்தசந்தமான இளைஞனாகக் காணப்பட்டான். மேனி நிறமும் நிறமும் இதனை முற்றிலும் மறைக்கவில்லை.

காவிக்காரன் அடிக்கடி வண்டியின் பின்புறமிருந்து முன்சென்று பக்கப் பலகணி வழியாக உள்ளே எதையோ கூர்ந்து அக்கரையுடன் பார்ப்பதும் மனநிறைவு பெற்றவன்போலத் தலையசைத்துக்கொண்டு மீண்டும் பின்னுக்கு வந்து நடப்பது மாக இருந்தான். அவ்வண்டியில் அப்படிக் காவிக்காரனுக்கு என்ன அருமையாக இருக்கக்கூடும் என்று அறியக் கிழவன் ஆர்வம் கொண்டான். அவனிடம் சிறிது பேச்சுக்கொடுத்து "அப்பா, வண்டியில் என்ன இருக்கிறது அப்படி அடிக்கடி பார்ப்பதற்கு? உள்ளே உன் குழந்தை எதையாவது தூங்க வைத்திருக்கிறாயா?" என்று கேட்டான்.

66

66

‘அது குழந்தையல்ல; ஓர் இளமங்கை."

‘அது உன் மனைவியோ?”

“எனக்கு மணமே ஆகவில்லை.” “காதலியோ?”

“என் காதல், நட்பு, பழக்கம் ஆகியவற்றுக்கெல்லாம் எட்ட முடியாத உயர்குடி நங்கை; என் வண்டியில் செல்லத்தக்கவள்கூட அல்ல. ஆனால் அவள் எனக்கு அறிமுகமானவள்.உடல் நொந்து உள்ளமும் நொந்த நிலையில் துயரமுற்றிருக்கிறாள். ஆகவேதான்