உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 25.pdf/85

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




64

அப்பாத்துரையம் - 25

அவர்கள் ஊரின் பெயர் ராதாபுரி. அது மிகவும் ஒதுக்க மான ஊர். ஆகவே மேற்கூறிய புதிய எண்ணங்களும் நாகரிக அலைகளுமில்லாமல் அவர்கள் நெடுங்காலம் அமைதியாகக் கழித்துவிட்டனர். ஆயினும் காலப்போக்கில் நாகரிகத்தின் பலகணி ஒன்று அவ்வூரின் மீது திறந்துவைக்கப்பட்டது. அவ் வூருக்குள்ளும் சில பத்திரிகைகள் நடமாடத் தொடங்கின. சதாசிவனும் அவ்வப்போது அவற்றைப் பொழுது போக்காகத் தருவித்துப் படிப்பான்.

பத்திரிகைகளில் உள்ள பல செய்திகளில் அவன் நாட்டுப் புற மனப்பான்மைக்கு மிகவும் கவர்ச்சி தந்த பகுதி குடும்ப வாழ்க்கை இரகசியங்கள், காதல் மர்மங்கள் ஆகியவை பற்றிய துண்டு வெளியீடுகளின் விளம்பரங்களே. இவற்றுட் பல இலவச மாக, அஞ்சல் செலவுகூட இல்லாமல் அனுப்பப்படுவதாகக் குறிப்பிட்டிருந்தது. கைம்மாறு கருதாமல், வலிய விளம்பரம் செய்து, தம்செலவில் பிறருக்கு வாழ்க்கையின் அடிப்படைச் செய்திகளிலேயே உதவ இம்மகாத்மாக்கள் முன்வருவது கண்டு அவன் வியப்படைந்தான். நாளடைவில் அவ்வார்த்தை அடக்க முடியாமல் அவற்றில் கண்ட விலாசங்களுக்கு எழுதினான். பல வெளியீடுகள் வந்து குவிந்தன.

இவற்றில் பல மருந்துகளுக்கான விளம்பரங்களாயிருந்தன. ஆயினும் அவற்றுடன் கூடவே வாழ்க்கையின் மர்மங்களும் விளக்கப்பட்டிருந்தன. அவற்றை அவன் ஆவலுடன் வாசித்தான். சிலவற்றில் குறிப்பிட்டிருக்கும் மலிவான காதல் பற்றிய நூல்கள், கதைகள், மருந்துகள் ஆகியவற்றைக்கூட வருவிக்கத் தொடங்கி னான். இவை அவன் வாழ்க்கை பற்றி அவன் நினைக்காத எண்ணங்களையும் புதிதாக நினைக்கத் தூண்டின. வேறு எவ்வகை அபினியையும் காணாத அவனுக்கு இவை அபினியாய் உதவின.

முதலில் இந்நூல்கள், வெளியீடுகள் தரும் செய்திகளை அவன் அவ்வளவாக நம்பவில்லை. “அவை பொய்யும் புனை கதையுமே; ஆனால் வாசிக்க மிகவும் கவர்ச்சிகரமானவை” என்று மட்டும் அவன் நினைத்தான். ஆயினும் யாவரும் மதிக்கத் தக்க பேர்போன பெரிய மனிதர், உயர் பதவியினர், மேனாட்டறிஞர்கள் நற்சாட்சிப் பத்திரங்களையும், அவற்றால்