உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 25.pdf/86

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




காதல் மயக்கம்

65

பயனடைந்த எண்ணற்றவர்கள் நன்றியுரைகளையும் பார்த்து அவனுக்கு உள்ளூர நம்பிக்கை பிறந்தது.

"மணவாழ்வில் முதலில் காதல் இருக்கும். வரவர அவ் வுணர்ச்சி மரத்துப்போகும். பழகப்பழகப் பாலும் புளிக்கும் அவ்வப்போது புத்துணர்ச்சி, புது அனுபவங்கள் வேண்டும். குறிப்பறிதல், காதலை வெளிப்படக்காட்டுதல், காதலுக்குப் பதில்காதல் இருக்க வேண்டிய அவசியம், கள்ளக்காதல், மண வாழ்வின் கசப்பினால் நெறிபிறழ்ந்த காதல் ஆகிய எண்ணற்ற செய்திகள் அவனுக்கு மலைப்பையும் அதேசமயம் மேலும் அறியும் ஆவலையும் தூண்டின.

யசோதை அவன் வாசிப்பதைப் பொருட்படுத்தவில்லை. அது எது பற்றியது என்றும் அவள் கவனிப்பதில்லை. ஒவ்வொரு சமயம் கவனித்தால்கூட அவள் அலட்சியமாக முகத்தைச் சுளித்துக்கொண்டு போய்விடுவாள். அவன் அவற்றை வாசிப்பதை விரும்பியதாகவும் அவள் காட்டிக் கொள்ளவில்லை; அவன் வாசிப்பதை எதிர்ப்பதாகவும் காணவில்லை. 'நல்லவர்கள் பெரியவர்கள் இதைப்போய் வாசிப்பார்களா?' என்ற ஏளனக் குறிப்பு அவள் முகத்தில் தொனிக்கும்.

சதாசிவனுக்குத் தான் வருந்தி வரவழைத்த இவ்வெளி யீடுகளை ஒன்றுமறியாத யசோதை அலட்சியமாகக் கருதுவது பிடிக்கவில்லை. அவற்றை வாசிப்பது கேவலம் என்று கூறினால் கூட அவனுக்குப் பொறுத்துக் கொள்ளமுடியும். 'அது அவனுக்குப் பொருத்தமானது, அவளுக்குப் பொருத்தமற்றது' என்ற பேதபாவம் அவனுக்குக் குத்துதலாக இருந்தது. தன் புதிய நூல்களில் கண்டபடி இது மணவாழ்வின் கசப்பு என்றும், காதலில்லாத த்து ஏற்படும் புறக்கணிப்பு என்றும் அவன் முடிவு கட்டினான்.

அவன் மன வேறுபாட்டை அறியாத யசோதை எப் போதும் போலவே நடந்து கொண்டாலும், அவன் புதிய பார்வைக்கு அவள் வரவர அவனிடம் மிக அசட்டையாக நடந்து வருவதாகத் தோன்றிற்று. தன்னைக் காதலிப்பவர் காதலைப் பற்றிக் கவலை கொள்வதும், பொறாமை கொள்வதும், புதிய காதல் முயற்சியால் காதலனைத் தன்வசப்படுத்தப் பார்ப்பதுமே