உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 25.pdf/87

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




66

அப்பாத்துரையம் - 25

ஒருவர் காதலின் அறிகுறிகள் என்றுபடித்த அவனுக்குத் தன் குடும்ப வாழ்வில் காதலில்லை என்றும் தோன்றிற்று. காலத்தில் காதல் வாழ்வு நாடாதவர் வயது சென்றபின் வருத்தப்படுவர் என்ற காதல் அறிவுரை அவன் கருத்திற் கவலையேற்றிச் சிந்தனையைக் கூராக்கியது.

கீழ்த்தரமான இவ்வெளியீடுகளில் அவன் ஈடுபடுவது கண்டு, அவனைக் கீழ்மக்கள் பலர் துணிந்து அணுகினர். அப்பு என்பவன் அத்தகையோருள் ஒருவன். அவனிடம் சதாசிவன் மெள்ளச் சென்று தன் ஐயத்தைக் குறிப்பாகத் தெரிவிக்க முயன்றான். சதாசிவன் உயர்நிலையுடையவன்; வயதானவன்; இந்நிலையிலும் அவன் அத்தகைய எண்ணங்களைக் கொண் டிருந்தானென்று காண அப்பு வியப்படைந்தான். சதாசிவன் செல்வனாதலால், அவன் போகிற போக்கில் விட்டுப் பணம் கறக்கலாம் என்று கண்டு அப்பு அவனுக்கு இதமாகப் பேசினான். 'குடும்பப் பெண்கள் காதலின்ப மறியாக் கயவர்களைத்தான் ஏமாற்றிப் பிழைக்கமுடியும். ஒருவேளை அவர்கள் காதலிக்க முன் வருவதுகூட, கணவன் காதல் அருமை அறிந்து வேறிடம் செல்கிறான் என்று தெரிந்தபின்தான்' என்று அவன் கூறினான். மேலும் அவன் தனக்குத் தெரிந்த பொதுப் பெண்களின் கவர்ச்சி, காதல் திறம் ஆகியவற்றை விரித்துரைத்தான். அதோடு காதலிலீடுபடுவதனால் மட்டுமேதான் பொதுமகளிர் குடும்பப் பெண்களால் வெறுக்கப்படுகிறார்கள் என்று அவன் சொல்லி வைத்தான்.

சதாசிவன் பண்பட்ட மனத்தில் இங்ஙனமாக விதை விதைத்து நீரும் உரமுமிட்டபின் அறுவடைக்கான வேலைகள் ஒழுங்காக நடைபெறலாயின. ஒருநாள் காதலைப்பற்றிய எண்ணங்களால் அவன் கருத்தழிந்து காதல் வெளியீடுகளைக் கூடப் படிக்க மனமில்லாமல்வெளியே உலாவச் சென்றான். ஊருக்கு அப்புறத்திலுள்ள பரந்தவெளியில் தனியே ஆழ்ந்த சிந்தனைகளுடன் அவன் சென்றுகொண்டிருக்கையில் பதி னெட்டு அல்லது இருபது வயது மதிக்கத்தக்க மங்கை ஒருத்தி அவன் எதிர்ப்பட்டாள். வழக்கத்திற்கு மேற்பட்ட அழகு அதை எடுத்துக்காட்டும் ஆடையணியுமுடைய அவளுடைய தோற்றத்தில் ஈடுபட்டு அவன் அவளைக் கூர்ந்துபார்க்க முயலு முன் அவளே நாணமின்றி அவனிடம் வந்து, "ஐயா! தாங்கள்