உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 25.pdf/120

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




காதல் மயக்கம்

99

வந்தவண்ணமாயிருந்தன. ஒரு சிலவற்றிற்கு மறுமொழிகளும் வந்தன. ஆனால் எல்லா மறுமொழிகளிலும் முகவரியும் கையொப்பமும் மட்டுந்தான் புதியது. கடிதம் ஒரே அச்சடித்த கடிதம் தான்; 'வேலை காலி இல்லை' என்ற ஒரே பல்லவிதான் எல்லாவற்றிலும்!

அரசியல் நிலையங்களுக்கு ஆள் செல்வாக்கும் பிற செல்வாக்கும்தான் வேண்டும்; தனிப்பட்ட நிலையங்களைப் பார்ப்போம்' என்று ஹரிஹரன் மனதைத் திடப்படுத்திக் கொண்டு மீண்டும் புது முயற்சியி லிறங்கினான். ஆனால் இங்கே தோல்விமட்டுமன்றி அவமதிப்பும் கிடைத்தது. “உங்கள் பட்டம், படிப்பு வெடிப்புக்களெல்லாம் எங்களுக்கு வேண்டாம்.நாங்கள் படித்தவர்களை எடுப்பதில்லை. திறமையுள்ளவர்களையே யெடுப்போம். உங்கள் திறமைக்கு என்ன சான்று" என்று கேட்டனர் அவர்கள்.

"வேலை கொடுத்தால் தானே திறமையைக்காட்ட

முடியும்?"

"எங்களுக்கு அப்படிப் பரிசோதனைகள் செய்து கொண் டிருக்க நேரமில்லை. வேலையிலிருந்து அனுபவமும் திறமைச் சான்றும் உடையவர்களையே எடுப்போம்."

66

வேலை அனுபவமும் திறமைச்சான்றும் பெறச்சம்பள மில்லாமல் உழைப்பதாகக் கூறிப் பார்த்தான். அதற்கும் 'படியாதவர்கள் எத்தனைபேரோ இருக்கிறார்கள். படித்த வர்களை எடுப்பதால் தங்கள் உரிமை கெடுகிறது என அவர்கள் முணுமுணுப்பார்கள் என்கிறார்கள் படிப்பில்லாமலே முன்னிலைக்கு வந்த நிலைய முதல்வர்கள்.

‘அரசியல் நிலையங்களும் தனி நிலையங்களும் மதியாத படிப்பைத் தந்து தொலைத்தார்களே, கல்வித்துறையாளர்கள், அவர்களாவது அதை மதிக்கவேண்டு' மென்று மூன்றாம் படலத்திலிறங்கினான் ஹரிஹரன்.

பல பள்ளி முதல்வர்கள் “பயிற்சியில்லாதவன் எங்களுக்கு வேண்டாம். மேலாட்கள் அத்தகையவர்களை எடுத்தால் சீற்றம் அடைவர்” என்றனர்.