உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 25.pdf/119

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




98

அப்பாத்துரையம் - 25

தரச்சித்தமாயிருந்த பத்மாவீட்டார் இப்போது வந்து அதைத்தர இணங்கினால் பேசாமல் முடித்துவிட வேண்டியதுதான்.படிப்பு வேட்டை தேறினால் பதவி வேட்டை தேறிற்று என்றா பொருள்? ஒரு வெற்றியின்போது மறுவெற்றியை எதிர்பார்ப்பது உலக இயல்பு. அந்த இயல்பை நாம் பயன்படுத்திக்கொள்வோம். அதில் நாமே விழுந்து விட வேண்டாம். பி. ஏ. முதல் வகுப்பில் முதன்மையா யிருந்தவர்கள் வேலையில்லாமல் திண்டாடுவதை நாம் பார்க்க வில்லையா? ஆகவே நயமாகப் பத்மாவையே முடித்து விடுவோம்.

சாரதா எண்ணியபடி யாவும் எளிதில் முடிந்தது. பையன் தேர்வைப்பற்றி மகிழ்ச்சி தெரிவிப்பது என்ற முறையில் பத்மாவை யிட்டுக்கொண்டுவந்த அவள் பெற்றோர்களிடம் பக்குவமாகப் பேசி இரண்டாயிரத்தைந்நூறு ரூபாய் மணப் பரிசிலுடன் மண வினைப்பேச்சு நடந்தேறிவிட்டது.

நல்ல செல்வமிக்க குடும்பத்தில் மணந்து கொண்டோம் என்ற மனநிறைவு ஹரிஹரனுக்கு இருந்தது. நல்ல கணவனைப் படைத்தோம் என்ற நினைவு பத்மாவுக்கும் இருந்தது.

ஆனால் அவர்கள் குலத்தில் மணவினை மணவா ழ்க்கை யின் தொடக்கமன்று. அது குலத்தின் வாழ்க்கையில் ஒரு முடிச்சு. அவர்கள் வாழ்க்கை தொடங்குமுன் இன்னொரு வினைமுறை - பூப்பு நிறைவு (ருது சாந்தி) விழா நடைபெற வேண்டும். மணவிழாவின் போது பத்மா பருவமடையாத சிறு பெண் ணாகவே இருந்தாள்.

-

மணவேட்டை முடிந்ததும் ஹரிஹரன் வாழ்க்கையின் வேலைதேடல் வேட்டை தொடங்கிற்று. அவன் பத்திரிகைகள் வாங்கி வாங்கிக் குவித்தான். விளம்பரத்துண்டுகள், நற்சான்று களின் படிகள், மனுக்கள், சிபாரிசுக் கடிதங்கள் ஆகியவற்றின் கூளங்களை அஞ்சல்காரன்போல் பையில் அடைத்துக்கொண்டு அவன் அலுவலகத்துக்கு அலுவலகம், ஊருக்கு ஊர் அலைந்து திரிந்தான்.

அஞ்சல் தலைகளை நிறைய வாங்கி வைத்துக்கொண்டு ஹரிஹரன் பல அரசியல் நிலையங்களுக்கும் மனுக்கள் அனுப்பி வைத்தான். அஞ்சல் பதிவுச்சீட்டுக்கள், கைப்பற்றுச் சீட்டுக்கள்