உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 25.pdf/118

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




4. உத்தியோக வேட்டை

வாழ்க்கை என்பதே ஒரு வேட்டை. அவ்வேட்டையில் பலனின்றி அலுத்துப் போகிறவர்கள் பலர்; அலையாமல் உலையாமல் வெற்றி காண்பவரும் பலர். ஆனால் இந்தப் பெரிய வேட்டைக்குள் பல சிறு வேட்டைகள் உண்டு; கல்விவேட்டை. மணவேட்டை, பணவேட்டை, உத்தியோக வேட்டை என்று. ஹரிஹரன் வாழ்க்கையில் முதல் வேட்டை எளிதாக முடிந்தது. மற்ற வேட்டைகள் தொடங்கின.

ஹரிஹரன் தாயார் சாரதாம்பாள் தன் கணவன் சஞ்சீவ னிடம் வந்து. “இப்போதுதான் கடவுள் கடைக்கண் பார்த்தார் போலிருக்கிறது. பையன் ஒரு மட்டில் பி.ஏ.படிப்பாகிய கடலைக் கடந்து விட்டான். இனி அவன் திருமணத்தையும் முடித்து விடவேண்டும்” என்று வாழ்க்கையின் இரண்டாம் காண்டத்தை நினைவூட்டினாள்.

சஞ்சீவன்: பையன் இந்த மட்டில் தேறியது நல்லதுதான் ன்னும் கொஞ்சம் பொறுத்தால் அவன் படிப்புக்கு வழி யிராது. ஏனென்றால் கைப்பணமும் கடன் பணமும் எல்லா வற்றையும் கரைத்து இனிக்கரைக்க வகையில்லாத போதுதான் அவன் தேறினான்.

சாரதா: ஏதோ தேறியமட்டும் நல்லதல்லவா? கடனோடு கடனாக வாங்கிக் கோவிலுக்கு அர்ச்சனை பண்ணி அமர்க்களம் பண்ணி விடுவோம். அப்போதுதான் பெண் வீட்டார்கள் நீ முந்தி, நான் முந்தி என்று வருவார்கள்.

சஞ்சீவன்: மணத்துக்கு என்ன அவசரம், நல்ல ட மாக வரும் வரை காத்திருந்தால் போகிறது.

சாரதா: அதெல்லாம் காத்திருந்து ஏமாறுபவள் நானல்ல, சூட்டோடு சூடாகக் காரியத்தை முடிக்கவேண்டும். 2500 ரூபாய்