உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 25.pdf/117

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




96

அப்பாத்துரையம் - 25

கோமான் காயம் ஆற மாதக்கணக்கானது. ஆனால் நீலாவும் கோகிலாவும் அவன் காலடியில் கிடந்து கண்ணீரால் அவனைக் குளிப்பாட்டினர். அவர்கள் திருந்தப்பெற்ற உள் ளன்புடன் கூடிய பணியால் அவன் குணமடைந்தான். அவர்கள் மனம் திரும்பியது கண்டு அவனும் எல்லையிலா மகிழ்ச்சி யடைந்தான்.

அவனும் தன் கண்மூடித் தனமான கட்டுப்பாட்டை அன்பு முறையுடன் தளர்த்தினான். காப்பியும் சிற்றுண்டியும் தாவணி களும் மட்டாக நடமாடத் தொடங்கின.

பச்சோந்தி எச்சில் கதை, அரளிக்கிழங்குக் கதை ஆகியவை வெளிப்படையாகக் கூறப்பட்டு மன்னிக்கப்பட்

அவர்கள் அன்புப்படிப்பினை முற்றுப்பெறும்படி கோமான் மாதவனையும் வரவழைத்துத் தன் தங்கையும் மருமகளும் திருந்துவதற்கு அவனே காரணம் என்றுகூறி அவனுக்கு விருந்தளித்துப் பரிசும் வழங்கினான். அவனும் மனமாரத் திருத்தமுற்றான்.

கோகிலாவுக்குக் கோமான் அவன் விருப்பத்துக்கொத்த கணவனைத் தேடி மண முடித்தான். மாதவன் தன் தகா எண்ணங்களை முற்றிலும் கைவிட்டு அவளைத் தங்கையாக மதித்து மணவினையில் தக்க துணையாயிருந்தான்.

கோமான் தன் மருமகள் குழந்தையை மடியில் வைத்துக் கொண்டு 'இது வள்ளுவர் பெருமான் தந்த அமுதம். “மக்கள் மெய்தீண்டல் உடற்கின்பம்" என்று அவரே கூறுவதற்குரியவர்'

என்பான்.