உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 25.pdf/116

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




காதல் மயக்கம்

95

கா.அ:யார் என்று குறிப்பாகத் தெரிந்ததா? யார் மீதாவது ஐயமில்லையா?

கோமான்: எதிர்பாராத செயலானதால் மூளை குழப்ப மடைந்து விட்டது; எதுவும் தெரியவில்லை எனக்கு யாரும் பகைவர் கிடையாது. ஆகவே யார்மீதிலும் ஐயமில்லை.

காவலதிகாரி திகைத்தார். ஆயினும் இரு பெண்கள் நிலையைப்பற்றிக் கேட்டும் அவர்கள் முகக் குறிகள் மூலமே உண்மை கண்டு மிருந்தார். ஆகவே அவர் “உங்கள் தங்கை, மருமகள் ஆகியபேர் மீதும் இதுவரையில் உடந்தையாயிருந்த ஐயம் உமக்கு இதற்கு ஏதேனும் உண்டா?

கோமான்: “எனக்கு யார் மீதும் கிடையாது'

""

காவலதிகாரி தன் செவிகளையே நம்பமுடியவில்லை, “என்ன அவர்களைக்கூட ஐயுறவில்லையா?” என்று கேட்டார்.

'இத்தகைய செயலை உங்கள் தங்கையோ மருமகளோ செய்வார்கள் என்று நீங்கள் ஐயுறுவீர்களா?” என்றான் அவன்.

கா. அ: 'மாதவனும் அவ்விரு பெண்களும் தங்கள் குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ளார்கள். நீங்கள் அதற்கு என்ன கூறுகிறீர்கள்’

கோமான்: கொலைக்குற்றத்தை ஒருவர் மீது சுமத்தினால் அச்சமும் கிலியும் எது வேண்டுமானாலும் சொல்லச் செய்யும். குற்றத்தை ஒப்புக்கொண்டால் தான் தண்டனை குறைந்து மன்னிப்புக்கிடைக்கும் என்று நீங்கள் ஆசை காட்டியிருக்கலாம். ஆகவே பொய்யாகவாவது ஒப்புக்கொண்டிருப்பார்கள்.

காவலதிகாரிகள் இயல்புகளை அறிந்து இப்படித் திண்ணக்கமாகப் பேசும் இவனை வைத்துக்கொண்டு வழக்கு மன்றத்தில் நுழைவதெப்படி என்று விழித்தார் காவலதிகாரி.

கொலைக்குற்றம், கொலைக்கு உடந்தையாயிருந்த குற்றம் ஆகியவை நன்கு தெளிவாக்கப்பட்டுத் தண்டனை பெறுவது உறுதி என்று காவலறையில் கிடந்த மூவர் முன்னும் காவலதிகாரி சென்று ‘இனி நீங்கள் போகலாம்.யாரை நீங்கள் கொலை செய்ய சூழ்ச்சிசெய்து கொல்ல முயன்று பார்த்து விட்டீர்களோ அவனே உங்கள் பக்கமாய் விட்டான். இனி, நீங்கள் போகலாம்” என்றார்.