உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 25.pdf/115

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




94

அப்பாத்துரையம் - 25

தோல்வி,வெட்கம், பச்சாத்தாபம் ஆகிய எல்லாம் சேர்ந்து இருவரையும் செயலற்றவர்களாக்கி விட்டன. அவர்களும் இரவைப் பேசாதிருந்து அழுது போக்கினர்.

மறுநாள் கோமான் கொலை முயற்சிச் செய்தி காட்டுத் தீபோல் பரவியது. அவன் மருத்துவ நிலையத்திற்குக் கொண்டு போகப்பட்டான். ஊர்காவலர் துப்பு விசாரித்து மாதவனையும் இருபெண்களையும் காவலிலிட்டனர்.

குற்றவழக்குத் தலைவர் மருத்துவ விடுதியிலேயே கோமானின் வாய் மொழிச்சான்றுபெற முயன்றார். கோமான் மனத்தில் இப்போது ஒரு புதிய போராட்டம் தொடங்கிற்று. நன்றிகெட்ட தன் தங்கைக்கும், மருமகளுக்கும் படிப்பினை தருவதா? அப்படியானால் அவர்கள் குற்றத்தை உள்ளபடி கூறவேண்டும். ஆனால் அதனால் யாருக்கென்ன நன்மை. அறிவற்ற அவர்கள் செயலைத் தானும் செய்வதா? அவர்கள் மதியாத உறவைத் தானும் மதியாதிருப்பதா? என்று அவன் மனம் ஊசலாடிற்று.

ஒரு முடிவுக்கும் வராத நிலையில் உணர்வு சோர்வதாக நடித்துத் தேர்விலிருந்து சற்றுத்தப்பி அமைதியுடன் மனதில் ஆராய்ச்சி செய்தான்.

இறுதியில் ஆத்திரம் குறைந்தது. அன்பு வெற்றி பெற்றது. 'இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர்நாண

நன்னயம் செய்து விடல்'

என்ற வள்ளுவர் வாய்மொழிகளும் இயேசு பெருமான் அறிவுரையும் அவன் மனத்தில் ஒளிவீசின. அதன் பயனாகத் தன் உறவினரை மட்டுமன்றி மாதவனையும் மன்னித்துவிட முடிவு செய்தான்.

ஒருமணி நேரம் சென்றபின் குற்றத்தலைவருடன் காவலதி காரி ஒருவர் வந்து கேள்விகள் கேட்டார்.

கா.அ : க் கொலையை யார் செய்தது?

கோமான்: யார் செய்ததென்று தெரியவில்லை. இருட்டில் ஆளைப்பார்க்க முடியவில்லை.