உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 25.pdf/134

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




காதல் மயக்கம்

113

பூசைக்கான குளமாதலால் அதன் தூய்மையைக்கெடுக்க அவன் விரும்பவில்லை.

கோயிலை அவன் நாற்புறமும் சுற்றிப் பார்த்தான். எங்கும் கால்வைக்க முடியாதபடி இடிந்து பொடிந்த கல்லும் மண்ணும், பரந்து வளர்ந்த கொடியும், முள்ளும் நச்சுயிர்களுமாகவே இருந்தன. உள்ளே செல்லத்தக்க வாயில்களும் வேறு எதுவும் இல்லை. ஒரே முள்வாயில்தான். அதுவோ ஈர்க்கு நுழையாதபடி சார்த்தி உள்ளிருந்து தாளிடப்பட்டிருந்தது. அது யாரும் போகாதிருக்கும் வழிபோலவே இருந்தாலும் உள்ளிருந்து தாளிடப்பட்டிருப்பதால் உள்ளே ஆளிருக்கவேண்டும் என்று நினைத்து அதனைத் தட்டினான். யாதொரு அரவமும் கேட்க வில்லை. தன்வலிவு கொண்டமட்டும் தட்டியும் பலனில்லாமல் சோர்ந்துவிட்டான். உள்ளேயிருந்து எப்படியும் ஆள் செல்லும் போது பார்த்துக் கொள்வோம் என்று அங்கேயே ஊணுறக்க மின்றிக் கிடந்தான்.

அக்கோயிலின் பாழ் நிலையைக்கண்ட விசயரங்கன் தனக்குள் 'ஐயோ, என் முன்னோரல்லவா இந்தப் பாழ் நிலைக்குக் காரணம். கோயில் செல்வத்தைக் கொள்ளையிட்டு ஈட்டிய பொருளைக் கொண்டல்லவா நான் இது வரை வாழ்ந்து வருகிறேன். என்ன வெட்கக் கேடு. இதை நான் திருத்தி அமைத்து என் குடிப்பழியைத் தீர்ப்பேன்!' என்று எண்ணிக் கொண் டிருந்தான்.

நெடுநேரம் சென்று கதவு திறக்கப்பட்டது. ஒரு பழுத்த கிழவன் வெளியே வந்தான். அவனே அக்கோயிலில் அப்போது வழிபாடாற்றி வந்த குருக்கள். அவன் விசயரங்கனைப் பார்த் ததுமே முகத்தைச் சுளித்துக்கொண்டு “யார்? இங்கே ஏன் வந்தாய்? எப்படி வந்தாய்? சாத்திரங்களுக்கு மாறாக, தூய்மை யற்ற உடலுடன் இதற்குள்வர உனக்கு என்ன துணிச்சல்!” என்றான்.

விசயரங்கன்: "ஐயா, கோயில் குளம் புண்ணிய தீர்த்த மாதலால் அதில் இறங்கித் தூய்மைக்கேடு செய்ய விரும்ப வில்லை. வேறு குளமோ, நீர் நிலையோ கேணியோகூட இல்லா ததால் இந்நிலையில் வந்திருக்கிறேன்.

குருக்கள்: ஆம், அக்குளத்தில் யாரும் குளிக்கப் படாது என்பது உண்மையே. அது பூசைக்குரியது. குருக்கள் குளிக்கும்