காதல் மயக்கம்
111
விசய: அப்படியானால் இப்பழி இதுவரை தவறாது நடந்து வருகிறதா? அதைப் பற்றி நான் கேள்விப்படவில்லையே.
கலையரசி: ஆம். நாலைந்து தலை முறையாக நடந்தே வருகிறது. இதை வெளியில் யாரிடமும் சொல்லாமல் வைத் திருக்கிறோம்.நான் இம் மரபில் வாழ்க்கைப்பட்டவளல்ல. இதில் பிறந்தவள். என்னை மணந்து அரசரான உன் தந்தை ஓர் ஆண்டே அரசராயிருந்தார். நீ வயிற்றிலிருக்கும் போதே இறந்து விட்டார். அவருக்கு முன் என் அண்ணன்மார் பலரும் 18 வயதில் இறந்தவர்களே. ஆண்கள் எவரும் 18 வயதுக்கு மேலிருப்ப தில்லையாதலாற்றான் சில தலை முறைகளாய்ப் பெண் வழியில் ஆட்சிவருகிறது. ஆனால் எப்படியும் ஆணல்லவோ ஆள வேண்டும். ஒரு தலைமுறை கழிந்தால் மீண்டும் ஆண் சந்ததி அழிந்து விடுகிறதே. இதை எண்ணிப் புலம்பும் விதி என் போன்ற இம்மரபுப் பெண்கள் தலையில் விடிந்திருக்கிறது.
விசய: இப்பழி இக்குடும்பத்தில் எப்படி வந்ததம்மா?
கலையரசி: அது ஒரு நீண்டகதை. இந்த ‘இரங்க' மரபில் முதலரசராயிருந்த ஆதிரங்கர் ஒரு கோயிலை அழித்து அதன் பொருளைக் கைக்கொண்டாராம். அந்தக் கோயில் குருக்க ளிட்ட பழி பல தலைமறைகளாக நடந்து வருகிறது.
விசய: ஆதிரங்கர் செய்த பழியைப் பின் வந்த நம் முன்னோர்கள் தீர்த்திருக்கலாமே.
கலையரசி: அதெல்லாம் எல்லாரும் பார்த்தாய் விட்டது. பழியின் தீம்பு நம்மரபைத் தலைமுறை தலைமுறையாய்த் தொடர்வது போல அதன் வயிரம் அக்குருக்கள் மரபில் தலைமுறை தலைமுறையாய்ப் பேணப்படுகிறது. அக்கோயிலைத் திரும்பக் கட்டி அதன் பொருளை ஒன்றுக்குப் பத்தாகக் கொடுக் கிறோம் என்று சொன்னாலும் அம்மரபினர் கேட்கமாட்டேன் என்று பாழுங் கோயிலைக் கட்டிப் பழியாளுகிறார்கள்.
விசயரங்கன் “அம்மா, இத்தகைய கொடும் பழி நம் அறியாச் சிறுபிள்ளைகளைத் தாக்கும்படி விட்டுக் கொண் டிருக்கக்கூடாது. ஏதோ நல்லவேளை நான் சில காலம் இப் பழிக்கு ஆளாகாதிருப்பதினால் அதற்குள் எப்பாடு பட்டாயினும்