110
1-
அப்பாத்துரையம் - 25
கலையரசி: குறை எனக்கல்ல, எல்லோருக்குமேதான். உனக்கு இத்தனை நாளும் அது தெரியவேண்டாமென்று று நினைத்து மறைத்து வைத்திருந்தேன். இனித் தெரியாமலிருக்க வழியில்லை. நம் குடும்பத்தின் மீது நிலையாக ஒரு பெரும் பழி தொங்கிக்கொண்டிருக்கிறது. நமது மரபில் தோன்றிய அரசர் எவரும் நேர்மையற்ற முறையிலேயே கொல்லப்பட்டு வந் துள்ளனர்; வருவர்; அதுவும் 18 வயதுக்குள்ளாக. அது மட் டு மன்று. இம்மரபில் பிறக்கும் எந்தப் பெண்ணும் மணமான ஓராண்டிற்குள் கைம்பெண்ணாகிவிடுவர்.இவ்வளவு கோரமான பழியின் கீழ் இருக்கும் நீ வெளித்தோற்றத்தால் மகிழ்ச்சி யடைவது கண்டு என் முகம் வாடிற்று.
இன்ப அலை மோதிய மன்னன் உள்ளம் இவ் எதிர்பாராச் செய்தி கேட்டு இடிந்தது போலாயிற்று. சிறிது நேரம் அவன் செயலற்று நின்று, பின் தேறி 'அம்மா, நீ கூறும் செய்தி எவ்வளவு மகிழ்ச்சியையும் குலைக்கப் போதியதாகவே இருக்கிறது. ஆன னால் அது முற்றிலும் பொருத்தமானதாகத் தோன்ற வில்லையே. நம்மரபில் எந்த அரசனும் 18 வயதுக்குள் அநீதமா இறப்பான் என்றீர்கள். இதோ நான் 30 ம் ஆண்டு நிறைவு விழா ஆற்றியிருக்கிறேனே. இம் மரபில் வந்த பெண்கள் மணமான முதலாண்டில் கைமை அடைவார் என்றீர்கள். இதோ என் மனைவி 3 பிள்ளைக்குத் தாயாயிருக்கிறாள். மூத்த புதல்வனுக்கே 12 வயதாகிவிட்டதென்று உனக்குத் தெரியுமே. அப்படியிருக்க நடைமுறையில் பலிக்காத இந்தப் பழியை நம்பி நீ இவ்வளவு கலவர மடைவானேன்?
கலையரசி: இப்பழியிலிருந்து நீ தப்பினால் எனக்கு மகிழ்ச்சியே. ஆனால் அது நிறைவேறாதிருக்கிறது என்று நினைப்பது தவறு. பழியின் பொருளை நீ ஆழ்ந்து கவனிக்க வில்லை. உன் மனைவி இந் நாட்டின் இளவரசிதான். ஆனால் அவள் நம் மரபில் பிறந்தவளல்ல. நீயும் இம்மரபில் ஆண் வரிசையில் பிறக்கவில்லை. ஆதலால்தான் உங்கள் இருவரையும் அஃது இதுவரை சாரவில்லை. ஆனால் உன் பிள்ளைகள் நிலை அதுவல்ல. நான் அஞ்சுவது இம்மரபுக்காக. நேர்மரபில் பிறக்காதவர்கள் அரசரான பின் அம்மரபில் சேர்ந்து விடு கின்றனர்.