6
5. முன்னோர் பழி
விசயரங்கன் தென்இந்தியாவின் செல்வ வளமிக்க ஒரு சிறு நாட்டின் அரசன். அவன் குடிகளை நடுநிலை நேர்மையுடன் ஆண்டுவந்தான். அவன் கருவூலங்கள் பொன்னால் நிறைந் திருந்தன; களஞ்சியங்கள் நெல் முதலிய பலவகைக் கூளங் களாலும் நிறைந்தன. குடிமக்களும் பசியும் பிணியும் இன்றி இன்பவாழ்வு வாழ்ந்து வந்தனர்.
அழகிற் சிறந்த ஆரணங்கு திருமலாம்பாள் மன்னன் வாழ்க்கைத் துணையாக வாய்த்திருந்தாள். அவளுக்கு இரண்டு ஆண் மக்களும் ஒரு பெண் மகவும் இருந்தனர்.
மன்னனது முப்பதாவது ஆண்டு விழா பல்லியங்கள் இயம்ப, பல்லணிகள் மிளிர, மக்கள் ஆடல்பாடல்களுடன் நடந்தேறிற்று.நட்பரசர்களும் அவர்கள் தூதர்களும் தத்தம் நன்கொடைப் பரிசில்களுடன் நகரெங்கும் நிறைந்து ஆர வாரித்தனர்.
மன்னன் வழக்கப்படி விழாக்கண்டு மகிழ்ச்சிப் பெருக் குடன் தன் தாயாகிய கலையரசியின் திருவடியில் விழுந்து வணங்கி வாழ்த்துப் பெற்றான். அதன் பின் அவன் தன் மகிழ்ச்சி தாங்காமல் அவளிடம் “அம்மா, உன் புண்ணியத்தால் நமக்கு எல்லாவகைச் செல்வமும் நிறைந்துள்ளது.என்போல் நற் பேறுடையவர்கள் வையகத்தில் வேறுயார் இருப்பார்கள்!” என்றான்.
எதிர்பாராத வகையாக இதைக் கேட்டதும் அரசி முகம் களிப்படைவதற்கு மாறாகக் கறைபடர்ந்து ஒளி குன்றிப் போயிற்று. விசயரங்கன் அதுகண்டு ஏமாற்றமடைந்து என்னம்மா இவ்வளவு நன்மைகளுக்கிடையிலும் மனங்க சக்கும்படி உனக்கு என்ன குறையேற்பட்டது?' என்று கேட்டான்.