காதல் மயக்கம்
139
அதை ஐயத்துக்கிடமின்றி நன்கு மறைத்ததுடன், அவன் உண்மைக்குப் பரிசாகப் புதிய எசமானனிடமிருந்து சிறிதளவு நிலமும் பொருளும் வந்தது. தான் சேமித்துவைத்த பொருள் என்ற சாக்குடன் வியாபாரி பொருளில் சிறிதெடுத்துப் புதிய எசமானனுடன் கூட்டாக வர்த்தகம் செய்தான். குத்தகை, ஈடு, தரகு முதலியவற்றில் வேறு ஈடுபட்டான். இவற்றில் கிடைத்த தென்ற சாக்கில் மீதிப்பொருளையும் வெளிக்கொணர்ந்து செல்வந்தனானான்.
தூரதேசங்களுக்குச் சென்று வைரங்களை விற்றும் வாங்கியும் வைர வியாபாரியாகவே அவன் ஆய்விட்டான்.
இப்போது அவன் திருட்டு மனிதர் எவர் கருத்திற்கும் தெரியாமல் மறைந்துவிட்டன. அவன் மனசாட்சி மட்டும்தான் அதற்குச் சான்று. ஆனால் இதனையும் மறக்கடிக்க அவன் வகைதேடினான். தன் வருவாயைப் பெருக்கிக்காட்டி அரசிய லுக்கு வருமானவரியை மிகுதியாகக் கொடுத்தான். வருமானவரி தானாகவருவதை அவர்கள் கணக்கிடவிரும்பவில்லை. பொது வேலை செய்து உழைப்பாளி என்று பேர்வாங்கினான். உழையாமல் சம்பாதிப்பது திருடுவதைவிட மோசம் என்று வேதாந்தம் பேசினான். இவையெல்லாம் வெற்றியடைந்தபின், அவன் தன் இறுதிப்பாடத்தைக் கற்றுக்கொண்டான். ‘தீய வழியால் சம்பாதித்தபின் தீயவழியை ஒழித்துவிடு. பின் நல்லவழியில் முன்னைய வாழ்க்கையை மறைக்கலாம்' என்பதே அப்பாடம்.
'மாலை இன்று பெருஞ்சொல்வன் மட்டுமல்ல; பெரிய பரோபகாரி, தேசசேவகன்; அவனை மகாஞானி, கர்மயோகி, தெய்வஅருள் பெற்றவன் என்றுகூடப் புகழ்பவர் உண்டு' என்று கிழவர் கூறிமுடித்தார்.
‘கேட்டது கதையா, நாடகமா, வாழ்க்கையா' என்று எல்லாரும் சுற்றிச்சுற்றிப் பார்த்தனர்.
ஒருசிலர் 'யாரப்பா அந்த மாலை? அவன் ஊர் எது, பேர் எது?'என்று ஆவலாய்க் கேட்டனர்.
கிழவர் 'மாலை என்பது அவன் பெயருமில்லை, அவன் ஊர் பேர் கூறமுடியாது. ஆனால் எத்தனையோ ‘மாலை' கள்