உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 6.pdf/73

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

42

மறைமலையம் 6

ரண்டாமவர் : தாம் ஒருவராகவே யிருந்துங் கணைய மரம்போற் பருத்து நீண்ட தம் தோள்களால் நாற்புறமுங் கரியகடலை எல்லையாக உடைய நில முழுவதையும் இவர் ஆண்டு வருதல் உண்மையிலேயே ஒரு வியப்பு அன்று. ஏனென்றால், அரக்கரொடு பகைகொண்டிருக்குந் தேவர் கூட்டங்களெல்லாம், இவரது நாண் ஏறிட்ட வில்லையும் படையையும் நம்பியன்றோ

இந்திரனது

வச்சிரப்

வெற்றியடைவோமென்று எண்ணி யிருக்கின்றன!

இருவரும் : (அருகே வந்து) ஓ அரசரே! நுமக்கு வெற்றி உண்டாகுக!

அரசன் : (தன் இருக்கையினின்றும் எழுந்து) நுங்களைப் போற்றுகின்றேன்.

இருவரும் : உமக்கு நலம் உண்டாகுக! (பழங்களைக் கையுறையாகக் கொடுக்கின்றனர்.)

அரசன் : (அவற்றை வணக்கமாய் ஏற்றுத்) தங்கள் கட்டளைக்கு எதிர்நோக்கி யிருக்கின்றேன்.

இருவரும்

ஆசிரமத்திலுள்ள முனிவர் நீர் ங்கிருப்பதை அறிவர்; ஆகையால் நும்மை இங்ஙனம் வேண்டுகின்றார்கள்

-

அரசன் : அவர்கள் கட் ளை யாது?

இருவரும் : மாமுனிவரான கண்ணுவர் இங்கு ல்லாமையினாலே அரக்கர்கள் நாங்கள் செய்யும் வேள்வி கட்கு இடையூறு இழைக்கின்றார்கள். ஆகையால் நீர் நுமது தேர்ப்பாகனோடும் இவ்வாசிரமத்தில் வந்து சில இரவு தங்கியிருந்து பாதுகாக்க வென்று அவர்கள் வேண்டிக் கொள்கின்றார்கள்.

அரசன் : அவர்கள் அருளியபடியே இருக்கின்றேன்.

விதூஷகன் : (மறைவாய் அரசனிடத்தில்) இப்போது இவ் வேண்டுகோள் நுமக்கு நயமானதா யிருக்கின்றது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_6.pdf/73&oldid=1577132" இலிருந்து மீள்விக்கப்பட்டது