உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 6.pdf/77

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

46

மூன்றாம் வகுப்பு

களம் : இளமரக்காவின்கண் உள்ள ஒரு துறவாசிரமம். (கண்ணுவ முனிவர்க்கு வேள்வி செய்யும் மாணாக்கன் ஒருவன் வருகின்றான்.)

றா

மாணாக்கன் : (குசைப்புல் அறுத்துக் கொண்டு) ஆ! துஷியந்த மன்னன் எவ்வளவு வல்லவனாயிருக்கின்றான்! மாட்சிமை தங்கிய அம் மன்னன் இவ் வாசிரமத்திற் புகுந்த வுடனே, நம்முடைய வேள்விச் சடங்குகள் இடையூறுகள் நீங்கப்பெற்றன. வில் தன் உங்கார ஓசையால் வெருட்டி டுதலையொப்ப, நாணைத் தெறிக்கும் ஓசை யளவினாலேயே சேய்மைக்கண் வருந் தடைகளை எல்லாம் ஓட்டி விடுகின் னன்றாற், கணைதொடுத்தலைப் பற்றிப் பேசுதல் எற்றுக்கு? நல்லது, இக் குசைப்புல்லை எடுத்துக் கொண்டுபோய் வேள்வி மேடைமேற் பரப்பும் பொருட்டு வேட்கு மாசிரியரிடம் (இருத்துவிக்குகளிடம்) கொடுக்கின்றேன். (சுற்றிப் போய் நிமிர்ந்து பார்த்து) பிரியம்வதே! கிள்ளப்படாத தண்டோடு இத் தாமரை இலைகளையும் நரந்தம்புல்லின் நெய்யினையும் யாருக்காகக் கொண்டு போகிறாய்? (உற்றுக்கேட்டு) யாது சொல்லுகின்றாய்? வெயிலிற் சென்றதால் உண்டான வெப்பம் பொறுக்கமாட்டாமற் சகுந்தலை மிக வருந்துகின்றன ளென்றும், அதனால் அவள் உடம்பைக் குளிரச் செய்வதற்காக இவற்றை எடுத்துப் போகின்றேன் என்றுஞ் சொல்லு றாயோ? அப்படியானாற் கருத்தாய்ப்பார்; அவள் கண்ணுவமாமுனிவர்பிரானுக்கு உயிராய் இருக்கின்றாள், நானும் அதனைத் தணித்தற்கு வேள்விச் சாலையின் தூய தீம்புனலைக் கௌதமி அம்மையார் கையிற் கொடுத்து விடுகின்றேன். (போகின்றான்.)

தனியுரை முடிந்தது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_6.pdf/77&oldid=1577136" இலிருந்து மீள்விக்கப்பட்டது