சாகுந்தல நாடகம்
35
வாயில்காவலன் : அப்படியே. (புறம்போய்ப் படைத் தலைவனை அழைத்துக்கொண்டு புகுகின்றான்.) இந்த முகமாய்ப் பார்த்தபடியே மன்னர்பெருமான் தங்களுக்குக் கட்டளையிட ஆவலுற்றிருக்கிறார்; தாங்கள் போங்கள்.
L
அருகே
படைத்தலைவன் : (அரசனை நோக்கி) வேட்டமாடுதல் தீதுபயப்ப தென்பது தெரிந்திருந்தாலும் அஃது இவர்க்கு நன்மையை விளைவித்திருக்கின்றது; மலைகளினிடையே திரியுங் களிற்றுயானைபோல், வலிமையினின்று வடித்தெடுத்த உடம்பினையுடையராயிருக்கின்றார். இவ் வுடம்பின் முன்புறம் வில்நாணை இடையறாது இழுத்தலால் இறுகி உரமா யிருக்கின்றது; ஞாயிற்றின் கதிர் வெம்மையையும் பொறுக்க வல்லதாய் இருக்கின்றது; வியர்வை நுண்டுளிகள் ஊடுருவு தற்கும் இடந் தராததாயிருக்கின்றது; இது மெலிந்திருப்பினுந் திரண்டுருண்டு வளர்ந்திருத்தலால் அது தோன்றவில்லை (கிட்டப்போய்) மாட்சிமை யுடை யீர்க்கு வெற்றித்திறஞ் சிறக்க! காட்டிலே விலங்குகள் வளைத்துக் கொள்ளப்பட்டன. ஏன் ன்னும் எம்பெருமான் காலந் தாழ்க்கின்றனர்?
அரசன் : படைத்தலைவ, மாதவியன் வேட்டமாடுவதைப் பற்றிப் பழித்துப் பேசுகின்றமையால், யான் மனவெழுச்சி குன்றிவிட்டேன்.
படைத்தலைவன் : (அப்புறமாய்) நண்பனே, நின் சொற்களில் உறுதியாய் இரு; இடையே நான் அரசன் மனப் போக்கின்படியே பேசுகின்றேன். (உரக்க) இம் மடையன் குழறிக் கொட்டட்டும். தாங்களே இதற்குச் சான்றாய் இருக்கின்றீர்கள். மிகுந்த கொழுப்புக் குறைந்து அடி வயிறு சிறுத்து மெலிதாயும், உடம்பு நொய்தாயும் இருத்தலால் அஃது யங்குதற்குச் சுளுவாய் இசைந்திருக்கின்றது; விலங்குகளின் துடுக்கும் அச்சத்தாலுஞ் சினத்தாலும் மாறுபட்டுக் காணப்படுகின்றது; அசைந்துசெல்லும் அவற்றை இலக்கு வைத்து எய்யும் அம்பு குறி பிழையாவாயின், அஃதன்றோ வில்லாளிகட்குப் பெரும் புகழ்; இத்தகைய வேட்டமாடுதலைத்
-