உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 6.pdf/65

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

34

மறைமலையம் -6

புள்ளி விளங்கு பொன்மான் உடன்பயின்ற

வள்ளைச் செவியாளென் மாதர்க் கொடிதனக்குத் தெள்ளு மடநோக்கந் தெருட்டியதால் மற்றதனை

உள்ளிக் கணைதொடுத்தும் உய்த்திடநான் மாட்டேனால்.

விதூஷகன் : (அரசன் முகத்தைப் பார்த்து) நீர் எதைப்

பற்றியோ உள்ளுக்குள்ளேயே நினைந்து சால்லிக் காள்ளுவதுபோல் தோன்றுகின்றது; நான் கானகத்தில்

அழுதவனாய் விட்டேன்.

அரசன்

(புன்முறுவல்செய்து) வேறென்ன? நண்பனுடைய சொல்லைக் கடக்கக் கூடாதென்று எண்ணிக் கொண்டு வாளா நின்றேன்.

விதூஷகன் : நீடு வாழ்வீராக! (போக முயல்கின்றான்.)

அரசன்

சிறிது பொறு, இன்னுஞ் சிறிது யான் சொல்லவேண்டியிருக்கின்றது.

விதூஷகன் : அப்படியே தாங்கள் கட்டளையிடலாம். அரசன் :- இளைப்பாறிய பின், வருத்தம் இல்லாத ஒரு நிகழ்ச்சியில் எனக்கு நீ துணைவனாக இருக்கவேண்டும்.

விதூஷகன் : அதென்ன கொழுக்கட்டைதின்பதிலா? அரசன் : எதில் என்பதைச் சொல்கின்றேன்.

விதூஷகன் : நான் என் சொல்லைப் பிணையாக வைத்திருக்கின்றேன்.

கட்ட

வா.

அரசன் : யார் அங்கே?

(வாயில்காவலன் புகுகின்றான்.)

வாயில்காவலன் : (வணங்கி) மன்னர் பெருமான்

ளை.

அரசன் : ஏ இரைவதகா! படைத்தலைவனை அழைத்து

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_6.pdf/65&oldid=1577123" இலிருந்து மீள்விக்கப்பட்டது