உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 6.pdf/70

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சாகுந்தல நாடகம்

39

அரசன் : இன்னும் எனக்கு இவ்வாறு தோன்றுகின்றது.

மோவா மலரோ நகங்களை யாத முழுமுறியோ

ஆவா கருவி துருவாது பெற்ற அருமணியோ

நாவாற் சுவைாயப் புதுநற வோசெய்த நற்றவங்கள் தாவா தொருங்கு திரண்டுவந் தாலன்ன தையலரே.

இத்தகையதோர் அரிய பொருளை நுகருதற்கு, நல்வினை யானது எவரை இங்கே அணுகுவிக்குமோ தெரியவில்லையே.

விதூஷகன் : அப்படியா? அப்படியாயின் நீர் அவளை உடனே மீட்கக் கடவீர்! இங்குதி நெய் தடவி நெய்ப்பான சென்னியையுடைய ஒரு தவசி கையில் அவள் அகப்பட்டுக் கொள்ளும்படி விட்டுவிடாதீர்.

கூட

அரசன் : அப் பெண்மணி தன் கருத்தின்படி நடக்கக் ாதவளா யிருக்கின்றாள்; அவள் தந்தையும் இப்போது இங்கில்லை.

விதூஷகன் : நல்லது, உம்மைப்பற்றி அம் மாதின் உள்ளக் குறிப்பு அவள் கண்களில் எப்படித் தோன்றிற்று?

அரசன் : துறவோர் குடிக்குரிய பெண்கள் இயற்கை யிலேயே நாணமுடையராய் இருக்கின்றனர். ஆயினும்,

“யான்நோக்குங் காலை நிலன்நோக்கும் நோக்காக்கால், தான்நோக்கி மெல்ல நகும்.”

(குறள். 1094)

இன்னுந், தான் முறுவலிக்கும்போது பிறிது ஏதோ பற்றி முறுவலித்தாள்போற் செய்வள்; இங்ஙனம் காதல் நாணத்தினால் தடை செய்யப்படுதலின், அஃது அவளால் மறைக்கப்படவும் வெளிப்படவும் மாட்டா தாயிற்று.

விதூஷகன் : உம்மைக் கண்டவுடனே அவள் உம்முடைய மடிமீது வந்திருக்கவேண்டுமென்று கருதுகின்றீரோ?

அரசன் : திரும்பவும் அவள் தன் தோழிமாரோடு போம்பொழுது நாணத்தினால் மிகவுந் தடைப்படினும், என்மேற் சென்ற தன் காதற் குறிப்பை நன்கு வெளியிடு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_6.pdf/70&oldid=1577128" இலிருந்து மீள்விக்கப்பட்டது