உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 6.pdf/72

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சாகுந்தல நாடகம்

(வாயில்காப்போன் புகுகின்றான்.)

41

வாயில்காப்போன் : எம்பெருமானுக்கு வெற்றி சிறக்க! வாயிலில் துறவோர் புதல்வர் இருவர் வந்திருக்கின்றனர்.

அரசன் : அற்றேல், அவர்களைக் காலந் தாழாமற் கொண்டு வருக.

வாயில்காப்போன் : இதோ கொண்டு வருகிறேன். (வெளியே போய்த்திரும்ப அவ்விருவருடனும் புகுகின்றான்,) அடிகாள்! காள்! இவ்வழியே வாருங்கள், இவ்வழியே வாருங்கள்.

(இருவரும் அரசனைப் பார்க்கின்றனர்)

ஒருவர் : அச்சோ! இவர் மேனி சுடர் ஒளியால் துலங்குகின்றதாயினும், இவரிடத்தில் நமக்கு அச்சந்தோன்ற வில்லை. ஒரு முனிவர்க்கும் இவர்க்கும் வேறுபாடு மிகுதியாய் இல்லாமையால் இஃது இவர்பால் இயற்கையே யாகும். துறவிகள் தம்மிடத்து விருந்து வருவோரை ஒம்புதற் பொருட்டு எல்லாரும் அணுகி இன்புறுதற் கேதுவாயுள்ள ஆசிரம வாழ்க்கை யுடையரா யிருத்தல் போல) இவரும் எல்லார்க்கும் பற்றுக்கோடான இவ்வாழ்க்கையினை மேற்கொண் டிருக்கின்றார். (துறவிகள் தவவொழுக்கத்தின் வலியால் உலகத்தைப் பாதுகாத்துப் பெரும் புண்ணியத்தை ஈட்டிக் கொள்ளுதல் போல) இவரும் உலகத்தைப் பாதுகாத்தலாற் பெரும் புண்ணியத்தை நாளுந் தொகுத்துக் கொள்ளுகின்றார்.(எப்படியானால் துறவோர்க்கு உரிய ‘ருஷி' என்னுஞ் சிறப்புப் பெயர் எல்லா விடங்களிலும் எல்லாரானும் புகழ்ந்து பாடப்படுகின்றதோ) அப்படியே இவரும் அவா அறுத்தமையாற் பெற்ற ‘ருஷி' என்னுந் தூயசிறப்புப் பெயரும்

'ராஜ என்னும் ம் அடைமொழியொடு

கூட

உபய

சாரணர்களாற் பாடப்பட்டு விண்ணுலகினை அடுத்து அடுத்து எய்துகின்றது.

இரண்டாமவர் : ஏ கௌதமா! இந்திரன் நேசரான

அந்தத் துஷியந்தன் என்பார் இவர்தாமோ?

முதல்வர் : ஆம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_6.pdf/72&oldid=1577130" இலிருந்து மீள்விக்கப்பட்டது