சாகுந்தல நாடகம்
அறிவிக்கப்படல் வேண்டும்.
ய
தன்
மகளிடத்து
145
மிக்க
காதலுடைய மேனகையோ எனக்கு இவ்விடத்தில் தானே ஏவற்றொழில் செய்து கொண்டிருக்கின்றாள்.
சகுந்தலை : (தனக்குள்) அம்மா அவர்களே நான் விரும்பியதைச் சொல்லிவிட்டார்கள்.
மாரீசர் : தவ வலிமையால் இவையெல்லாங் கண்ணுவ மாமுனிவர் கண்ணெதிரே தோன்றிவிட்டன.
அரசன்
சினவாதிருந்தனர்.
இதனாலன்றோ மாமுனிவர் என்னைச்
மாரீசர் : அப்படியானாலும், நம்முடைய வாழ்த்துரை களை அவருக்கு விடுத்தல்வேண்டும்; யார் அப்பா அங்கே?
மாணவன்
இருக்கின்றேன்.
(ஒரு மாணவன் வந்து)
பெருமானே! இதோ
அடியேன்
மாரீசர் : ஏ காவலா! வான்வழியாய் உடனே சென்று தீமொழிப்பயன் ஒழிந்தமையால் நினைவுகூர்ந்த துஷியந்தனாற் சகுந்தலை தன் மகனொடு திரும்ப ஏற்றுக் கொள்ளப் பட்டன ளென்னும் நற்செய்தியை எனது கட்டளைப்படி கண்ணுவமா முனிவர்க்குத் தெரிவிக்கக் கடவாய்.
மாணவன் : அடிகள் கட்டளைப்படியே. (போய் விட்டான்.) L___STOỐT.)
மாரீசர் : மகனே! நீயும் நின் புதல்வனும் மனையாளும் உடன்வர நின் நண்பன் தேவேந்திரனது தேரில் ஏறிக் கொண்டு நின் நகரத்திற்குப் புறப்படு.
அரசன் : பெருமான் கட்டளைப்படியே.
மாரீசர் : இன்னும், இந்திரன் நின்குடிகட்கு ஏராளமான மழையைப் பெய்விக்கட்டும்! நீயும், வேள்விகள் வேட்டுத் துறக்க நாட்டினரை முற்றும் உவப்பிப்பாயாக! இங்ஙனம் இவ்விருவகை உலகங்களுக்கும் விளையும் பயன்கள் பற்றிப் புகழற்பாலனவாம் நற்செயல்களை ஒருவருக்கொருவர்