உறவினரான
சாகுந்தல நாடகம்
143
அரசன் : தெய்வப் பெருமானே! தங்கள் ஊழியக் காரியான இம் மடந்தையை யான் காந்தருவ மணமுறைப் படி L மணந்து கொண்டும், அதன்பிற் சிலநாட் கழித்து இவள் தன் உறவினரால் என்னிடங் கொண்டுவரப்பட்ட பொழுது யான் என் நினைவிழப்பால் இவளை விலக்குதல் செய்து, தங்கள் மாட்சிமை தங்கிய கண்ணுவருக்குத் தவறிழைத்தேனாயினேன். பிறகு, கணையாழியைப் பார்த்ததும் அவர் மகளை நான் முன் மணந்த துண்மையென அறிந்தேன். இஃதெனக்குப் பெரிதும் புதுமையாயிருக்கின்றது. கண்ணெதிரே கடந்துபோம் உருவத்தைக் உருவத்தைக் கண்டும் கண்டும் ‘அஃது யன்றுபோலும்' என ஐயமுற்றுப், பின் அதன் அடிச்சுவடு களைப் பார்த்துத் துணிபு எழுந்தவாறுபோல், எனது மனமயக்கமும் அப்பெற்றிந்தா யிருந்ததே.
யானை
மாரீசர் : குழந்தாய்! நீ தவறி நடந்ததாகக் கொண்ட ஐயத்தை ஒழித்துவிடு. அந்த நினைவிழப்பும் உன்னிடத்து நிகழ்ந்தது முறையே தான். சொல்வதைக் கேள்!
அரசன் : கருத்தாயிருக்கின்றேன்.
மாரீசர் : அப்ஸரஸ்தீர்த்தத் துறையிலிருந்து மிகத் துயருற்ற சகுந்தலையோடும் மேனகை தாட்சாயணியிடம் வந்த அப்பொழுதே, துருவாச முனிவரின் தீமொழியால் நின் இல்லறக் கிழத்தியான இந்தப் பேதை நின்னால் விலக்கப் பட்டாளல்லது வேறு காரணத்தா லன்றென எனது தவக்காட்சியால் தெரிந்துகொண்டேன். இதோ அத்தீமொழி கணையாழியைக் காண்டலும் ஒழிந்து போயிற்று
அரசன் : (ஆறுதலோடு) இப்போது அப் பழியினின்றும் விடுதலை பெற்றேன்!
சகுந்தலை : (தனக்குள்) நல்வினை வயத்தால் என் ஆருயிர்க்கணவர் காரணமில்லாமல் என்னைத் தள்ளிவிட வில்லை. உண்மையில் திட்டுண்ணப் பட்டதாக யான் நினைவு கூற வில்லையே! அல்லது வருவிக்கப்பட்ட அத் தீமொழி, (எம்பெருமானைப்) பிரிந்தமையால் நினைவு வறிதாய்ப் போன என் நெஞ்சத்தால் அறியப்படாத தாயிற்றுப் போலும்