138
மறைமலையம் 6
கடுகநோற்கும் நோன்பினால் முகம் வற்றியும், ஒரேமுறை பின்னிய சடையுடன் இருப்பதனால், மிகவும் இரக்க மில்லாதேனாகிய என்னைப் பிரிந்தது முதல் தூய வொழுக்கத் தோடும் நெடுநாள் இந் நோன்பினை மேற்கொண்டு செய்திருக்கின்றன ளென்பது புலனாகின்றது.
சகுந்தலை : (கழிவிரக்கத்தினால் வெளுத்துத் தோன்றும் அரசனைப் பார்த்து) இவர் உண்மையில் என் கணவனாகத் தோன்றவில்லை. அங்ஙனமாயின், மங்கலமான ஒரு காவற் பூண்டை அணிந்திருக்கும் என் மகனைத் தன் உடம்பு தீண்டித் தீட்டுப்படுத்தும் இவர் யார்?
சிறுவன் : (தன் அன்னையிடம் போய்) அம்மா!
யாரோ
என்னை ஒருவர்
அணைக்கின்றார்.
ஓ மகனே'
தோ
என்றழைத்து
அரசன் : என் அன்பே! நீ என் நிலைமையைத் தெரிந்து காண்டதனை நான் இப்போது காண்கின்றமையால், நான் உன்னிடத்துக் காட்டிய பெருங்கொடுமையும் நன்மை யாகவே முடிந்தது.
சகுந்தலை : (தனக்குள்) ஓ நெஞ்சமே! ஆறுதலெய்து ஆறுதலெய்து! உன்மேற்கொண்ட பகைமையை ஒழித்த தெய்வத்தால் நான் இரக்கத்துடன் நடத்தப்படுகின்றேன். இவர் தாம் என் காதலர்.
அரசன் : ஏந்தெழில் முகத்தாய்! கிரகணம் விட்டவுடன் உரோகிணி என்னும் மீன் முழுமதியைச் சேர்ந்தவாறு போல என் மறதி என்னும் இருள் நினைவினால் துரத்தப் பட்ட பின்பு நீ என் எதிரே வந்து நிற்பது என் நல்வினையே!
சகுந்தலை : எம் பெருமானுக்கு வெற்றி சிறக்க! (இது பாதிசொல்லி நிறுத்தி மிடறு அடைப்பட்டுக் கண்ணீர் சொரிகின்றாள்.)
அரசன் :
அழகியாய்! வெற்றி என்னுஞ் சொல் கண்ணீரினால் தடைப்பட்டு நின்றாலும், இங்குலிகம் ஊட்டப்