உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 6.pdf/170

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சாகுந்தல நாடகம்

139

படாமையால் வண்மை கலந்து சிவப்பாய் விளங்கும் இதழ்களொடு கூடிய உன் முகத்தை நான் பார்க்கின்றமையால் வெற்றி அடைந்தவ னாயினேன்.

சிறுவன் : அம்மா! இவர் யார்?

சகுந்தலை : குழந்தாய்! உன் நல்வினையைக் கேள்.

அரசன் : (சகுந்தலையின் அடிகளில் வீழ்ந்து) உருவழகி! நான் உன்னை நீக்கினமையினால் உண்டான துயர நினைவு நின் நெஞ்சினின்றும் ஒழிவதாக! அந்நேரத்தில் என் மனம் ஏதோ அறியப்படாத காரணத்தால் வலியதொரு மாயத்தில் மயங்கி நின்றது; இருள்வடிவான மலகுணவலி மிகுந்துள்ளவர்களின் நிலை மங்கலப் பொருள்களிடத்திலும் பெரும்பான்மையும் இத்தன்மையதாகவே இருக்கின்றது; குருடன் தன் தலையிற் சூட்டப்பட்ட மலர் மாலையையும் பாம்பென்றஞ்சி எறிந்து விடுகின்றான்!

சகுந்தலை : எம்பெருமான் எழுந்திருக்க! திண்ணமாகவே முற்பிறவியில் தூய அறவினைகளைத் தடைசெய்த என் தீவினையானது அந் நாட்களில் தன் பயனை விளைவித்தது; அதனாலேதான், இயற்கையில் இரக்கமுடையராயிருந்தும் என் காதலர் அவ்வாறு என்னிடம் நடந்தனர்.

(அரசன் எழுந்திருக்கின்றான்.)

சகுந்தலை : தீவினையாட்டியான இவனை எம் பெருமான் எவ்வாறு நினைவு கூரலாயினர்?

அரசன் : (என்னெஞ்சத்திற் றைத்த) துயர மென்னுங் கணையைப் பிடுங்கிவிட்டபின், அதனைச் சொல்லுகின்றேன்.

பேதைமை தன்னான் மாதைநான் நீக்கக் கண்ணின் நுண்டுளி கீழிதழ் வீழ்ந்து பெருந்துய ருறுத்திய தன்றே, இன்றே மற்றது சிறிதே வளைமயி ரிறையில் உற்ற தாகலிற் பொற்கொடி அதனை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_6.pdf/170&oldid=1577519" இலிருந்து மீள்விக்கப்பட்டது