உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 6.pdf/171

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

140

மறைமலையம் 6

அளியேன் பெருந்துயர் நீங்க

எளியேன் முந்துறத் துடைக்குவென் மயிலே

(சொல்லியவாறே துடைக்கின்றான்.)

சகுந்தலை : (கணையாழியைப் பார்த்து) எம் பெருமானே! இஃதன்றோ அந்த மோதிரம்?

அரசன்

அதுவே தான்; இம்மோதிரந் திரும்பக் கிடைத்தமையினாலேதான், நான் உண்மையாக நினைவுவரப்

பெற்றேன்.

சகுந்தலை : எம் பெருமானை அடையாளங் கொண்டு மெய்ப்பிக்கப் புகுந்த காலத்திற்றான் இது காணாதுபோய் இத்தனை துன்பமும் விளைவித்தது.

அரசன் : ஆகவே இக் கொடியானது நான் இவ்வேளிற் பருவத்தொடு கூடியதற்கு அடையாளமாக இம்மலரை அணிந்து கொள்ளட்டும்!

சகுந்தலை : நான் அதனை நம்பவில்லை, எம்பெருமானே இதனை அணிந்து கொள்ளட்டும்!

(பிறகு மாதலி வருகின்றார்.)

மாதலி : நீடுவாழ்வீர்! நல்வினைவயத்தால் நீர் நும்உரிமை மனையாளொடு கூட்டப் பட்டதனாலும் நும் புதல்வன் திருமுகத்தைக் கண்டதனாலும் இனிது வாழ்க!

அரசன்

என் விருப்பம் இனிய பழத்தைப் பெறுவதாயிற்று; ஐய மாதலி! இச் செய்திகள் இந்திரனுக்குத் தெரியாதிருக்கலாமே!

மாதலி : (புன்சிரிப்பொடு) தேவர்கள் பார்வைக்கு எட்டாதது யாதுளது? நீடு வாழ்வீர், வாரும்! தெய்வத் தன்மையுள்ள மாரீசர் தம்மைப் பார்க்கும்படி உமக்கு விடை தந்தருளினார்.

L

அரசன் : சகுந்தலை! புதல்வனை எடுத்துக்கொள். உன்னை முன்னிட்டுக் கொண்டுபோய் அவரைக் காண விரும்புகின்றேன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_6.pdf/171&oldid=1577527" இலிருந்து மீள்விக்கப்பட்டது