சாகுந்தல நாடகம்
141
சகுந்தலை : எம்பெருமானொடு கூடச் சென்று குரவரை அணுக நாணுகின்றேன்.
அரசன் : என் காதலி! மங்கலமான நேரங்களில் அப்படிச் செய்யலாம். வா, வா.
(எல்லாரும் போகின்றார்கள்.)
(மாரீசர் அதிதியோடு இருக்கையிலிருந்த வண்ணமாய்த் தோன்றுகின்றார்.)
மாரீசர் : (அரசனைப் பார்த்து) தாட்சாயணீ! உன் மகன் இந்திரனது போரில் முதன்மை பெற்றுச் செல்பவரும், உலகத்தைப் பாதுகாக்கின்றவருமான இவர்தாந் துஷியந்த மன்னன். இவர்தம் வில்லினாற், கூரிய விளிம்புகளுள்ள வச்சிரப்படையின் றொழில் செய்து முடிக்கப்படுதலால், அப் படை இந்திரனுக்கு ஓர் அணிகலமாய் விட்டது.
அதிதி : இவருடம்பின் றோற்றத்தி லிருந்தே இவரது பேராற்றலை அறியக்கூடும்.
மாதலி :
நீடுவாழ்வீர்! இதோ தேவர்களைப் பெற்றோரான இவர்கள் தம் பிள்ளை மேலுள்ள காதற் குறிப்புத் தோன்ற உம்மைப் பார்க்கின்றார்கள். அவர்கள் கிட்டப்போம்.
யை
அரசன் ஓ ஐய மாதலி! தக்கன் மரீசி என்னும் இருவர்க்கும் பிறந்தமையால் நான்முகனுக்கு ஒரு தலைமுறை பிற்பட்டவரும் பன்னிருவடிவான துவாத சாதித்தியருக்கும் பிறப்பிடமானவரென்று முனிவர்களாற் சொல்லப்பட்ட வரும், மூன்றுலகத்திற்கும் இறைமகனும் வேள்விப்பலி முதலிற்பெற்று நுகர்ந்து இன்புறுகின்றவனுமான இந்திரனை ஈன்றவரும், தானே யுண்டாவதான பரம் பொருளுக்கும் மேலான புருடனுந் தான் றோன்றுதற்குப் பிறப்பிடமாகக் கொள்ளப்பட்டவருமான அவ்விருவரும் இவர்கள் தாமோ! மாதலி : வேறு யார்?