உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 6.pdf/287

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

256

66

  • மறைமலையம் -6

தென்னவன் சேரலன் சோழன் சீர்ப்புயங்கன் வரக் கூசவாய்” என்று சேர, சோழ, பாண்டியர் மூவரையே தமது திருவாசகத்திற் குறிப்பிட்டு அருளிச் செய்திருக்கிறார். அவர் பல்லவர் ஆட்சிக் காலத்திருந்தனராயின், அங்ஙனமிருந்த சுந்தரமூர்த்தி நாயனார் 'பல்லவர்க்குத் திறைகொடா மன்னவரை மறுக்கஞ் செய்யும்' என அவர்களைக் குறிப்பிட்டு அருளிச் செய்தவாறுபோற் றாமும் எங்காயினும் அருளிச் செய்திருப்பர். அவ்வாறன்றிச் சேர சோழ பாண்டியரென்னும் மூவரையே அவர் குறிப்பிட்டிருத்தலின், அவர் இத்தமிழ் நாட்டில் அம் மூவேந்தரது ஆட்சியைத் தவிரப் பிறிது ஏதுங் கலவாத காலத்து, அஃதாவது நான்காம் நூற்றாண்டிற்கு முன் இருந்தவரென்பது தெற்றென விளங்கா நிற்கும்". (பக். 298)

முடிவுரை

தமிழ் இலக்கண இலக்கியப் பேரறிவும், சைவ சித்தாந்தக் கொள்கைத் தெளிவும், பௌத்த சமண மத வரலாற்று அறிவும் நிரம்பப் பெற்று, அனைத்துத் திறங்களையும் பயன்படுத்தி மாணிக்க வாசகர் காலம் கி.பி. மூன்றாம் நூற்றாண்டெ நிறுவியுள்ள அடிகளாரின், இலக்கிய வரலாற்றுத் திறன் ஈடு ணையற்றதாகும். ஆறாண்டுக் காலம் அயராது உழைத்து அடிகள் u யாத்த இந்நூல், அவர்தம் சிறந்த இலக்கிய வரலாற்றுத் திறனை, உள்ளடங்கி, மாணிக்கவாசகரின் வரலாற்று உண்மையும், அவர் அருளிச் செய்த நூல்களின் உண்மையும், அவற்றின் வாயிலாக அறிய வேண்டி நிற்கும் முற்கால பிற்கால நூல்களின் உண்மையும், சைவம், வைணவம் பௌத்தம், சமணம் மாயாவாதம் முதலான சமயங்களின் உண்மையும், அவ்வச் சமயங்களிற் காலங்கடோறும் புகுந்த புராணக் கதைகளின் உண்மையும், அவ்வக் காலங்களில் நின்ற அரசியல்களின் உண்மையும், அவ்வக் காலங்களில் திரிபெய்தி வந்த ஒழுக்கங்களின் உண்மையும் தெளிவுறுத்தி நிற்கிறது.

மறைமலையடிகள் நூற்றாண்டு மலர்

(பக். 38-43)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_6.pdf/287&oldid=1577771" இலிருந்து மீள்விக்கப்பட்டது